2019ம் ஆண்டுக்குள் 620,000 வீடுகள் அமைக்கும் திட்டம்
வீட்டு உரிமை வேலைத்திட்டத்துக்காக
திறைசேரியில் விசேட செயலணி
குறைந்த
வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும்
நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டு
உரிமையினை பெற்றுக் கொடுக்கும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 120,000 வீடுகளும், நடுத்தர
வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 500,000 வீடுகளும் எனும்
அடிப்படையில் மொத்தம் 620,000 வீடுகளை 2019ம் ஆண்டுக்குள் அமைப்பதற்கு
எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வேலைத்திட்டத்துக்கு
தேசிய முன்னுரிமை வழங்கி, அதற்கு தேவையான
அங்கீகாரத்தைப் பெறல், குறித்த காணிகளை
ஒதுக்கிக் கொள்ளல் மற்றும் வேலைத்திட்டத்தை
குறிப்பிட்ட காலப்பிரிவிற்குள் செய்து முடித்தல் ஆகியவற்றுக்கு
தேவையான வசதிகளை செய்து கொள்ளும்
நோக்கில் திறைசேரியின் கீழ் விசேட செயலணி
ஒன்றை (Special Purposes
Vehicle – SPV) ஸ்தாபிப்பது
தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரம்
வழங்கப்பட்டுள்ளது
தேசிய
கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள்
அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர்
ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment