அரச வைத்தியசாலைகளில்
தரவரிசை
கிழக்கு மாகாணத்தில்..
கல்முனை ஆதார வைத்தியசாலை முதலாமிடம்
கல்முனைஅஸ்ரப்ஞாபகார்த்தஆதாரவைத்தியசாலை 17ஆவது இடம்
பாரிய சத்திரசிகிச்சை தரவரிசையில் தேசியரீதியில்
கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு இரண்டாமிடம்
இலங்கையிலுள்ள
அரச வைத்தியசாலைகளில்
இவ்வாண்டின் முதல் காலாண்டில் நடாத்தப்பட்ட
பாரிய சத்திரசிகிச்சைகளின்
தரவரிசையின்படி கிழக்கில் கல்முனை ஆதார வைத்தியசாலை
இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
சுகாதார
அமைச்சு வெளியிட்டுள்ள
விசேட பிரசுரத்தில்
இப்புள்ளிவிபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்தவாரம்
கொழும்பில் நடாத்த ப்பட்ட வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கான
மாதாந்த அமர்வில்
இந்த புள்ளிவிபரம்
தெரிவிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
இலங்கையிலுள்ள
பெரிய வைத்தியசாலைகளில்
நடாத்தப்பட்ட சத்திரசிகிச்சைகளில் பாரிய சத்திரசிகிச்சைகளை மட்டும் மையமாக வைத்து சுகாதார
அமைச்சு நடாத்திய
இவ்வாய்வில் 10 வீதத்திற்கு
மேல் வீதத்தை
பெற்ற 42 வைத்தியசாலைகள்
இடம்பிடி த்துள்ளன.
57.38 வீதத்தைப் பெற்று
பேராதனை
போதனா வைத்தியசாலை
முதலிடத்தை சுவீகரித்துள்ளது.
54.79 வீதத்தைப் பெற்று
கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலை இரண்டாமிடத்தைச் சுவீகரித்துள்ளது.
53.57வீதத்துடன் மூன்றாமிடத்தை
வெலிசற
தேசிய வைத்தியசாலை
பெற்றுள்ளது.
இத்தரவரிசைப்படுத்தலில்
கண்டி போதனா
வைத்தியசாலை 6ஆவது இடத்தையும் காலி கராப்பிட்டிய
போதனாவைத்தியசாலை 26ஆவது இடத்தையும்
யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலை 38ஆவது இட த்தையும்
பிடித்துள்ளன.
கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில்...
தேசியரீதியில்
இரண்டாமிடம் பெற்ற கல்முனை ஆதாரவைத்தியசாலை முதலாமிடத்திலுள்ளது.
இதேவேளை, மூதூர் ஆதாரவைத்தியசாலை
10ஆவது இடத்திலும்
கல்முனை அஸ்ரப்
ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலை 17ஆவது இடத்திலும்
மகாஓய ஆதாரவைத்தியசாலை 19ஆவது இடத்திலும் கந்தளாய் ஆதாரவைத்தியசாலை
29ஆவது இடத்திலும்
தெஹியத்த கண்டிய ஆதார வைத்தியசாலை
34ஆவது இடத்திலும்
உள்ளன.
வட மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில்...
தேசியரீதியில்
9ஆவது இடத்திலுள்ள
வவுனியா ஆதார
வைத்தியசாலை முதலிடத்தில் உள்ளது.
தெல்லிப்பளை
ஆதார வைத்தியசாலை
15ஆவது இடத்திலும்
மன்னார் ஆதார
வைத்தியசாலை 22ஆவது இடத்திலும் யாழ். போத
னாவைத்தியசாலை 38ஆவது இடத்திலும் முல்லைத்தீவு ஆதார
வைத்தியசாலை 41ஆவது இடத்திலும் உள்ளன.
0 comments:
Post a Comment