முன்னாள் மந்திரி
ஜனார்த்தன ரெட்டி மகள் திருமணம்:
முகூர்த்த பட்டுப்புடவை ரூ.17 கோடி
கர்நாடக மாநில பா.ஜனதா முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி
மகளின் ஆடம்பர திருமணம் நேற்று நடந்தது. இதில் மணமகள் அணிந்த முகூர்த்த புடவையின் விலை
மட்டும் ரூ.17 (இந்திய ரூபா) கோடி ஆகும்.
கர்நாடக மாநில
பா.ஜனதா
முன்னாள் மந்திரி
ஜனார்த்தன ரெட்டி.
சுரங்க மோசடி
வழக்கில் சிக்கி
சிறை சென்ற
அவர் தற்போது
நிபந்தனை ஜாமீனில்
வெளியே வந்துள்ளார்.
ஜனார்த்தன ரெட்டியின்
மகள் பிராமணிக்கும்,
ஐதராபாத்தை சேர்ந்த சுரங்க அதிபர் ராஜீவ்
ரெட்டிக்கும் நேற்று பெங்களூரில் ஆடம்பரமாக திருமணம்
நடந்தது.
இதற்காக பெங்களூர்
அரண்மனை மைதானத்தில்
36 ஏக்கர் பரப்பளவில்
பிரமாண்ட செட்கள்
அமைக்கப்பட்டிருந்தன. தமிழ், தெலுங்கு,
இந்தி சினிமா
கலை இயக்குனர்கள்
சுமார் 1½ மாதமாக
இந்த செட்களை
வடிவமைத்தனர்.
நேற்று காலை
ஜனார்த்தன ரெட்டி
தனது மகளை
சாரட் வண்டியில்
அமரவைத்து திருப்பதி
வெங்கடேஸ்வரா கோவில் போல அமைக்கப்பட்டுள்ள செட்டுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தார்.
மணமக்களின் குடும்பத்தார் முழுக்க முழுக்க வைரத்தால்
ஆன நகைகளையே
அணிந்து இருந்தனர்.
திருப்பதியில் இருந்து
அழைத்து வரப்பட்ட
8 வேத விற்பன்னர்கள்
மந்திரங்களை ஓத மணமகள் பிராமணி கழுத்தில்
ராஜீவ் ரெட்டி
தாலி கட்டினார்.
இந்த திருமணத்தில்
கர்நாடக முன்னாள்
முதல்- மந்திரிகள்
எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை
முதல்- மந்திரிகள்
அசோக், ஈஸ்வரப்பா,
கர்நாடக மந்திரிகள்
பரமேஷ்வர், ராமலிங்கரெட்டி, நடிகர்கள் விஷால், சரத்பாபு,
சாய் குமார்.
கன்னட நடிகர்
ரவிச்சந்திரன், சாதுகோகிலா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு
ஆந்திரா, உடுப்பி,
சீனா, இத்தாலி
ஸ்டைலில் 152 வகையான உணவு பரிமாறப்பட்டன.
இந்த ஆடம்பர
திருமணத்தில் ரெட்டி சகோதரர்களின் குடும்பத்தினர் வைரத்துடன்
ஜொலித்தனர். பெண்கள் அனைவரும் ஒட்டியானம், காப்பு
உள்பட வகை
வகையான வைர
நகைகளை அணிந்திருந்தனர்.
மணமகள் பிராமணி
அணிந்த முகூர்த்த
புடவையின் விலை
ரூ.17 கோடி
ஆகும். தங்க
ஜரிகையால் நெய்யப்பட்டிருந்த
புடவையில் வெள்ளை
மற்றும் இளஞ்சிவப்பு
நிற வைர
கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.
திருமண விழாவில்
5 நாட்கள் இரவில்
நடைபெற்ற விருந்து
நிகழ்ச்சிகளில் வெற்றிலை பாக்கு ஆகியவற்றின் செலவு
மட்டும் ரூ.50
லட்சம் ஆகும்.
வெற்றிலை பாக்கு
மடித்து தருவதற்காக
500 மாடல் அழகிகளும்,
500 இளம்பெண்களும் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.
விருந்தினர்களை வரவேற்கவும்,
சிவப்பு கம்பளத்தின்
மீது நடந்து
வந்த மணமக்களின்
மீது காஷ்மீர்
ரோஜா மற்றும்
ஆம்பூர் மல்லி
மலர்களை தூவுவதற்கும்
மும்பை, சென்னை,
பெங்களூர் ஆகிய
இடங்களில் இருந்து
500 மாடல் அழகிகளும்,
500 ஆண் மாடல்களும்
வந்திருந்தனர். இவர்கள் வெள்ளை நிற பட்டுவேட்டி-
சட்டை, வெள்ளை
நிற பட்டுப்புடவை
மற்றும் கவரிங்
நகைகள் அணிந்திருந்தனர்.
0 comments:
Post a Comment