19 வயதுக்குட்பட்ட பாடசாலை மட்ட உதைபந்தாட்டப் போட்டி
கிண்ணத்தை
கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி கைப்பற்றியது
இலங்கை
உதைபந்தாட்ட சம்மேளனம் பாடசாலைகளின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையில் கொத்மலை கிண்ணத்துக்காக
நடத்திய கால்பந்தாட்டத் தொடரில் கொழும்பு ஸாஹிறாக்
கல்லூரி சம்பியனானது.
யாழ்ப்பாணம்
துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு மின்னொளியில் இறுதியாட்டம்
நடைபெற்றது. கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியை எதிர்த்து சென். பற்றிக்ஸ் கல்லூரி
அணி மோதியது. பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் மிகவும்
விறு விறுப்பாக ஆரம்பம் முதலே ஆட்டம் இடம்பெற்றது.
ஆட்டத்தின் முதல் 30 நிமிடங்கள் வரை கோல்கள் எவையும் பதிவாகவில்லை. 34ஆவது நிமிடத்தில் கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி தனது ஆதிக்கத்தை ஆரம்பிக்கத் தொடங்கியது. எம். சர்வானின் முதல் கோலுடன் முதல்பாதி ஆட்டம் நிறைவுக்கு வந்தது. தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டத்தில் போட்டியின் 52 ஆவது நிமிடத்தில் கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி தனது இரண்டாவது கோலினைப் பதிவு செய்தது. சஹோல் அடித்த இந்த கோலுடன் ஸாஹிறாக் கல்லூரியின் வெற்றியானது பெரும்பாலும் உறுதியானதாகவே கொள்ளப்பட்டது. தொடர்ந்து. போட்டியின் 81 ஆவது நிமிடத்தில் தூர்வன் ஸாஹிறாக் கல்லூரி சார்பாக மூன்றாவது கோலினைப் பதிவு செய்தார்.
ஆட்டநேர முடிவில் 3:0 என்ற கோல்கணக்கில்
கொழும்பு
ஸாஹிறாக் கல்லூரி பற்றிக்ஸை வீழ்த்தி கொத்மலைக் கிண்ணத்தை கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக கொழும்பு ஸாஹிறாக்
கல்லூரியின் சுல்பிகார் அஹமட் தெரிவானதுடன் சிறந்த கோல் காப்பாளராக கொழும்பு ஸாஹிறாக்
கல்லூரியின் கலீலுர்ரஹ்மான் தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை மூன்றாமிடத்திற்கான ஆட்டத்தில் வென்னப்புவ சென்.ஜோசவாஸ் கல்லூரியை எதிர்த்தாடிய இளவாலை சென். ஹென்றிஸ் 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
0 comments:
Post a Comment