மாணவர்களுக்கான சீருடைக் கூப்பன்
எதிர்வரும் 8 ஆம் திகதி விநியோகம்!
அரச பாடசாலை மாணவர்கள் இலவச சீருடை பெறுவதற்கான கூப்பன்கள் எதிர்வரும் 08 ஆம் திகதி விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு இந்த கூப்பன்களை கிடைக்கச் செய்வதற்கு இலகுவான நடைமுறையொன்று பின்பற்றப்படவுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த வருடத்தைப் போன்று மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலைக்குச் செல்வதற்கோ, கையொப்பம் இடுவதற்கோ அவசியமில்லை எனவும்,
வகுப்பாசிரியர் குறித்த மாணவரின் கையொப்பத்துடன் அதனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்
அமைச்சு அறிவித்துள்ளது
ஆரம்பப் பிரிவு மாணவர்களின் சீருடை கூப்பன்களுக்கான பொறுப்பை அப்பிரிவு ஆசிரியர்கள் ஏற்க வேண்டும். தரம் 6 முதல் ஏனைய சகல மாணவர்களும் அவர்களுக்குரிய கூப்பன்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
கடந்த வருடங்களில் பெற்றோர்கள் சந்தித்த பல இடர்கள் இம்முறை நீக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அச்சிடப்பட்டுள்ள கூப்பன்களில் மாகாணம், கல்விக் காரியாலயம் மற்றும் குறித்த பாடசாலை என்பனவற்றைக் கண்டறியும் வகையில் இரகசிய இலக்கம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான தெரிவித்துள்ளார்
வகுப்புக்குப் பொறுப்பான ஆசிரியர் இந்த கூப்பன்களை விநியோகம் செய்வார்.
0 comments:
Post a Comment