வரவு செலவுத் திட்டம் - 2017:
மாணவர்களுக்கு காப்புறுதி திட்டம்
காஸ் ஒன்றுக்கான விலை 25 ரூபா குறைப்பு
சமூர்த்தி பயனாளிகளுக்கு மாதாந்தம் 5 கிலோகிராம் அரசி.
காஸ் ஒன்றுக்கான விலை 25 ரூபாய் குறைக்கப்படுகின்றது.
பயறு ஒரு கிலோகிராமின் விலை 15 ரூபாயால் குறைப்பு.
பருப்பு ஒரு கிலோகிராமின் விலை 10 ரூபாயால் குறைப்பு.
உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின் விலை 5 ரூபாயால் குறைப்பு.
நெத்தலி ஒரு கிலோகிராமின் விலை 5 ரூபாயால் குறைப்பு.
வௌ்ளை சீனி, கிலோகிராமொன்று 2 ரூபாயால் குறைப்பு.
மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 5 ரூபாயால் குறைப்பு.
உள்நாட்டு பால் மா 250 கிராமின் விலை 250 ரூபாய்.
425 கிராம் நிறையுடைய
உள்நாட்டு டின்மீன் 125 ரூபாய்.
சமூர்த்தி பயனாளிகளுக்கு மாதாந்தம் 5 கிலோகிராம் அரசி.
தன்னியக்க டெலர் இயந்திரங்கள் மூலம் பணம் மீளப்பெறுவதற்கான கட்டணம்
10 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.
சதொச சில்லறை விற்பனை நிலையங்கள் 100-ஐ நிர்மாணிக்க 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
லக் சதொசவுக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு. ஒவ்வொரு சதொசவுக்கு 10,000 ரூபாய்.
இரவு 9 மணிக்குப்பிறகு, அதிவேக நெடுஞ்சாலை கட்டணத்தில் 50 ரூபாய் குறைக்கப்படும்.
2017 ஆம் ஆண்டில்
க.பொ.த.
உயர்தரத்திற்கு உள்வாங்கப்படும் 175,000 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டெப்லட்
கணனிகள் (Tab) வழங்கப்படும்.
ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட 10 கரையோர மாவட்டங்களின் வாழ்க்கைத் தரத்தை அபிவிருத்தி செய்ய ரூபா 1,200 மில்லியன் ஒதுக்கப்படும்.
கோழி இறைச்சி மீது விதிக்கப்பட்டுள்ள 1 கிலோ கிராமுக்கான முழு கோழியின் அதிகூடிய சில்லறை விலையை ரூபா 420.
அழகு பூக்கள், மீன்கள் வளர்ப்பு கைத்தொழிலை ஊக்குவிக்க நாற்றுமேடைகளை ஏற்படுத்த அரசாங்கத்தினால் 50% வட்டிக் கடன் வழங்கப்படும். இதற்கென ரூபா 50 மில்லியன் ஒதுக்கப்படும். உச்சபட்சம் ரூபா 5 இலட்சம் வழங்கப்படும்.
மன்னார் தாராபுரம் குளத்தை புனருத்தாபனம் செய்ய ரூபா 600 மில்லியன்.
விசேட கல்வித் தேவையைக் கொண்ட மாணவர்களுக்கு நாளாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு ரூபா 50 இலிருந்து ரூபா 150 ஆக அதிகரிக்கப்படும்.
சகல மாணவர்களுக்கும் (05 - 19 வயது) தலா ரூபா 2 இலட்சம் கொண்ட 4.5 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி திட்டம்.
உயர் கல்வி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை, 2020 ஆம் ஆண்டளவில் 50,000 ஆக அதிகரிக்கப்படும்.
17 பல்கலைக்கழகங்களில் பொறியியல், வைத்திய, சட்ட பீடத்தில் கற்கும் மாணவர்களில், தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மூவருக்கு, உலகளாவிய ரீதியில் உயர் நிலையிலுள்ள பல்கலைகழகத்திற்கு செல்லும் புலமைப்பரிசில் திட்டம் உருவாக்கப்படும்.
பல்கலைக்கழகங்களில் விரிவுரை நிகழ்த்தப்படும் கால எல்லையை இரவு 8.00 மணி வரை நீடிப்பதற்கு பரிந்துரை.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனுமதிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களில், இஸட் புள்ளியை (Z Score) அடிப்படையாகக் கொண்டு அனுமதி பெறும் மாணவர்கள் 5,000 பேருக்கு, தலா ரூபா 8 இலட்சம் வரை கடன் உதவி வழங்குவதற்கு பரிந்துரை.
இலங்கையில் கல்வியைத் தொடர விருப்பமான வெளிநாட்டு மாணவர்களுக்கு 5 வருட வீசா வழங்குவதற்கான பரிந்துரை.
இளைஞர் யுவதிகளுக்கு உயர் கல்வியை வழங்கும் நோக்கில், தனியார் பிரிவின் உதவியை பெறுவதன் மூலம், அரச சார்பாற்ற பட்டப்படிப்பு நிறுவனங்களை நாட்டில் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குதல்.
செவிலியர்களுக்கான (Nurse) பயிற்சி பாடசாலைகளுக்கு ரூபா 200 மில்லியன் ஒதுக்கப்படும்.
அம்பாறை, யாழ்ப்பாணம், கராபிட்டி ஆகிய வைத்தியசாலைகளில், விசேட குழந்தை பிரிவை உருவாக்குவதற்கு ரூபா 1,000 மில்லியன் ஒதுக்கப்படும்.
அனைத்து நோயாளிகளும், சிகிச்சை வழங்கப்பட்டு அவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறும்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைக்கான செலவுகள் அடங்கிய அறிக்கை வழங்குவதற்கு நடவடிக்கை.
முச்சக்கரவண்டிகளுக்கு பதிலான இலத்திரனியல் கார்கள் பெற்றுக்கொடுக்கப்படும். அதற்காக 1000 வாகனங்களை இறக்குமதிச் செய்ய 50 சதவீதம் வட்டி குறைப்பு.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான்களுக்கு பதிலாக 35 இருக்கைகளைக் கொண்ட பஸ்களை அறிமுகப்படுத்துவதற்கு ஊக்கச் சலுகை வழங்கப்படும்.
மார்ச் 31ஆம் திகதியிலிருந்து புதிய உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும்.
15 வருடங்களுக்கும் மேலாக அரச வீடுகளில் வசித்துவருவோருக்கான வீட்டு உரிமையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது, ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்க, 2 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.
வடக்கு கிழக்கின் வீடமைப்புக்களை வேகமான முன்னெடுப்பதற்கு 5000மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு .
சமுர்திப் பயனாளிகளின் வருமானம் அதிகரிக்கப்படும். அத்துடன், சமுர்த்தி வேலைத்திட்டம், “ஜன இசுறு” என்று பெயர் மாற்றப்படும்.
வாழ்க்கைப்பூராகவும் நீடிப்பதற்கான அக்ரஹார திட்டத்தை நீடிக்க திட்டம்
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்த நடவடிக்கை .
பட்டதாரிகளுக்கான தொழிற்றுறையொன்றை ஏற்படுத்துவதற்காக, 1.5 மில்லியன் ரூபாயை, வட்டியின்றி வழங்க நடவடிக்கை. இதற்காக, 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு .
நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவுக்கும் 1 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு .
தேசிய இளைஞர் படையணிக்கு 4 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப 180 மில்லியன் ஒதுக்கீடு.
இளைஞர் தொழில் பயிற்சி மையங்களுக்காக 4,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு .
போதைப்பொருளுக்கு எதிரான பொலிஸ் பிரிவுக்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு .
ஊடகத்துறையிலுள்ளவர்களுக்கு 300,000 ரூபாய் கடன் வசதி .
ஊடகவியலாளர்கள், உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு, 50 வீத மானியத்தின் கீழ், 150,000 ரூபாய் கடன்.
சமய ஸ்தலங்களை அபிவிருத்தி செய்வதற்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு .
வெளிநாட்டு தொழிலாளர்களின் ஆகக்குறைந்த ஊதியமாக 300 டொலர்.
இளைஞர்களது திறமைகளை வளர்க்க, 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
0 comments:
Post a Comment