அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதி யார்?

வெளியாகியுள்ள முடிவுகளின்படி

டொனால்டு டிரம்ப் முன்னிலையில்

அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்குப்பதிவுகள் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து அடுத்த சில மணிகளில் தெரிய ரும்.

இந்த தேர்த்லில் முக்கிய வேட்பாளர்களாக களம் கண்டுள்ள ஹிலாரி கிளிண்டன் மற்றும் டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் பொதுமக்களின் தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி டொனால்டு டிரம்ப் முன்னிலையில் இருப்பதாக அறிவிக்கப்படுகின்றது
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. ஹிலாரி, டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.


ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மொத்தமுள்ள 538 தொகுதிகளில் 270-ல் வெற்றி பெறுபவர்கள் தான் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார்கள்.



இதனிடையே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கெண்டக்கி மற்றும் இந்தியானா மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஹிலாரி வெர்மாண்ட் மாகாணத்தை வென்றுள்ளார்.

இறுதியாக வந்த நிலவரப்படி ஹிலாரி 97இடங்களிலும், ட்ரம்ப் 130 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.




இதனிடையே குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தமது மனைவியுடன் வாக்களித்த பின்னர் தெரிவித்துள்ள கருத்துகள், 

தேர்தலின் முடிவை ஏற்றுக் கொள்வேன். எனக்கு எத்தகைய சூழ்நிலை அமையும் என்பதை எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன். அதிகாரம் தொடர்பான மாற்றங்கள் மிகவும் மென்மையாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். வரலாற்றில் நான் இடம்பிடித்ததிற்கு மகிழ்ச்சியடைகிறேன்.” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top