இந்திய மத்திய அமைச்சரின் பெருந்தன்மை:
இளம்பெண் நெகிழ்ச்சி

விமான பயணத்தின் போது, தன் இருக்கையை விட்டுக் கொடுத்த, இந்திய மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவுக்கு, சமூகதளத்தில் பாராட்டு குவிந்து வருகிறது.
இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்திய மத்திய அமைச்சர்கள் பலர், 'டுவிட்டர், பேஸ்புக்' உள்ளிட்ட சமூகதளங்கள் மூலம், மக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு வருகின்றனர்.
மக்களும், இவர்களுக்கு செய்திகளை அனுப்புவதுடன், தங்கள் பிரச்னைகள் குறித்தும் தெரிவித்து வருகின்றனர்; இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதால், மக்களின் பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.அந்த வகையில், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோர், சமூகதளங்களில் மிகவும் பிரபலமானவர்களாக உள்ளனர். அந்த பட்டியலில், இந்திய விமான போக்குவரத்து துறை இணைய அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவும், தற்போது சேர்ந்துள்ளார்.

சமீபத்தில், பெங்களூரில் இருந்து ராஞ்சிக்கு, தன் மனைவியுடன், விமானத்தில் பயணம் செய்தார் சின்ஹா. அவர்களுக்கு, முதல் வகுப்பில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.அதே விமானத்தில், இளம்பெண் ஸ்ரேயா மற்றும் அவரது தாயாரும் பயணம் செய்துள்ளனர்.

அந்த பெண்ணின் தாய்க்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், தங்கள் இருக்கைக்கு பதிலாக, முதல் வகுப்பு சீட்டில் அமர்ந்திருந்தனர். அந்த சீட்கள், சின்ஹா மற்றும் அவரது மனைவிக்காக முன்பதிவு செய்யப்பட்டவை. விமானத்துக்குள் வந்த சின்ஹா, நிலைமையை தெரிந்து கொண்டவுடன், அவர்களை எழுந்திருக்க வேண்டாம் எனக் கூறி, சாதாரண வகுப்பில் சென்று அமர்ந்தார்.மத்திய அமைச்சரின் இந்த பெருந்தன்மையால், புல்லரித்து போன அந்த பெண், அவருடன், 'செல்பி' எடுத்துக் கொண்டதுடன், உடனடியாக சமூகதளத்தில் செய்தியாக வெளியிட்டார். லோக்சபா தேர்தலின் போது, பிரதமர் மோடியின் பிரசார வாசகமான, 'நல்ல நாள் வந்துவிட்டது' என்பதை, அந்தச் செய்தியில் ஸ்ரேயா குறிப்பிட்டு உள்ளார். இந்திய அமைச்சரின் நடவடிக்கைக்கு, தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top