தர்காவில்
குண்டு வெடித்ததில் பயங்கரம்!
குழந்தைகள், பெண்கள் உட்பட 52 பேர் பலி
பாகிஸ்தானின்
லாஸ்பெல்லாவில் உள்ள ஷா நூரானி தர்காவில் குண்டு வெடித்ததில் சுமார் 52 பேர் கொல்லப்பட்டதாக
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘தமால்’ என்ற சூஃபி நடனத்தை தர்கா ஷா நூரானியில்
மக்கள் கண்டு களித்துக் கொண்டிருக்கும் போது பயங்கர குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இதில் 100 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின்
பலூசிஸ்தான் மாகாணம் லாஸ்பெல்லாவில் புகழ்பெற்ற ஷா
நூரானி தர்கா
உள்ளது. இங்கு நேற்று மாலை சுமார் 500 பேர்
தரிசனம் செய்வதற்காக
திரண்டிருந்தனர். அப்போது தர்கா வளாகத்தில் சக்திவாய்ந்த
குண்டு வெடித்தது.
இதில், ஏராளமான
பக்தர்கள் தூக்கி
வீசப்பட்டனர்.
சம்பவ
இடத்திற்கு பொலிஸாரும், மீட்புக்குழுவினரும்
ஆம்புலன்ஸுகளுடன்
விரைந்து வந்து
மீட்பு பணியில்
ஈடுபட்டனர். பலர் இரத்த வெள்ளத்தில் சடலமாகக்
கிடந்தனர். பலர் உடல் உறுப்புகள் சிதைந்த
நிலையில் உயிருக்குப்
போராடினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு
உடனடியாக மருத்துவமனைக்கு
அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த
குண்டுவெடிப்பில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 52 பேர் இறந்திருப்பதாக மீட்புக்குழு
அதிகாரிகள் தெரிவித்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து
மீட்பு பணி
நடைபெறுவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம்
என அஞ்சப்படுகிறது.
0 comments:
Post a Comment