கிழக்கு மாகாண சபையில் பேசிவிட்டு செல்வதைத் தவிர

வேறு எவ்வித செயற்பாடுகளும் இல்லை

'எதிர்க்கட்சி பக்கம் செல்லவுள்ளேன்'

மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ. ரஸ்ஸாக்


எதிர்வரும் மாதம் கிழக்கு மாகாண சபையின் வரவு - செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்படுகின்றபோது அதை முழுமையாக எதிர்க்கவுள்ளேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ. ரஸ்ஸாக் (ஜவாத்) தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு, தவிசாளர் சந்திரதாஸ கலபெத்தி தலைமையில் நேற்று 11 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்த அமர்வில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ. ரஸ்ஸாக் மேலும் உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாண கல்வி செயற்பாடுகள் உள்ளிட்ட ஏனைய அமைச்சின் செயற்பாடுகளில் பாரிய அதிருப்தி மக்கள் மத்தியில் காணப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிப் பல அமர்வின்போது, நான் மட்டுமல்ல கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலர் பேசி இருந்தனர்.
இதனை இந்தச் சபையில் தெரிவித்தும், இதுவரை காலமும் குறிப்பிட்டுப் பேசிய எந்த விடயங்களுக்கும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அத்துடன், கிழக்கு மாகாண சபையில் பேசிவிட்டு செல்வதைத் தவிர வேறு எவ்வித செயற்பாடுகளும் சீராக இடம்பெறுவதாக எனக்குத் தெரியவில்லை.

எனவே, அடுத்த சபையில் நான் எதிர்க்கட்சிப் பக்கம் மாறிச்சென்று சகல நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளேன்.இவ்வாறு மாகாண சபை உறுப்பினர் கே.எம்..ரஸ்ஸாக் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top