கல்முனைப் பிரதேசத்தில் 59 பேருக்கு  டெங்கு!

சாய்ந்தமருதில் 11 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!!


கல்முனைப் பிரதேசத்தில் 59 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
சாய்ந்தமருதில் டெங்குக் காய்ச்சல் காரணமாக சிறுவன் ஒருவன் 12 ஆம் திகதி சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ள சம்பவமும் இடம்பெற்றுள்ளது..
டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சாய்ந்தமருதைச் சேர்ந்த முஹம்மத் சபீக் முஹம்மத் நுஷாக் (வயது 11) என்ற சிறுவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை தெற்கு மற்றும் வடக்குச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 40 பேரும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேரும் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பிரதேசத்தில் டெங்குக் காய்ச்சலின் தாக்கம் திடீரென்று அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு அவசர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்படுகின்றது. 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top