ரூ.650 கோடி செலவில் பிரம்மாண்ட திருமணம்
பெங்களூரை சேர்ந்த பிரபல சுரங்க தொழில் அதிபரும், பாஜகவின் முன்னாள் அமைச்சருமான காளி ஜனார்த்தன ரெட்டி தனது மகளின் திருமணத்தை 650 கோடி ரூபாய் செலவில் இன்று நடத்தவிருக்கிறார்.
ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிரமானிக்கும் ஹைதரபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் விக்ரம் தேவாரெட்டியின் மகன் ராஜிவ் ரெட்டிக்கும் இன்று திருமணம் நடைபெறவுள்ளது.
பண்டைய அரச குடும்பத்தில் திருமணம் நடந்தால் எப்படி இருக்குமோ அதுபோலவே தனது மகளின் திருமணத்தையும் அரண்மனை போன்ற இடத்திலேயே அமைக்க ரெட்டித் திட்டமிட்டுள்ளார்.
அழைப்பிதழை திறந்தவுடன் 'பிரமானி வெட்ஸ் ராஜிவ்' என்ற பாடல் திரையில் ஓடும். ரெட்டி குடும்பத்தினரும் திரையில் தெரிவார்கள். இதற்கு ரூ.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.
திருமணத்துக்காக குடும்பத்தினர் அனைவருக்கும் தங்க நகைகள், பட்டுப்புடவைகள் ரூ.100 கோடி செலவில் வாங்கப்பட்டுள்ளது. நடிகர் நடிகைகள் கலை நிகழ்ச்சிக்காக ரூ.10 கோடி செலவிடப்பட்டுள்ளது. விருந்தினர்கள் வருவதற்கு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தவுள்ளது. இதற்காக ரூ.20 கோடி செலவிடப்பட்டுள்ளது. விருந்துக்காக ரூ 20 கோடி செலவிடப்பட்டுள்ளது. திருமணத்துக்கான செட் அமைப்பது போன்ற பிற விஷயங்களுக்காக பல கோடிகள் செலவிடப்பட்டுள்ளது.
இந்த திருமணத்துக்காக தனது 10 சொத்துக்களை அடமானம் வைத்து ஜனார்த்தன ரெட்டி பணத்தை திரட்டியுள்ளார். திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆந்திர, கர்நாடக மாநில பெரும் அரசியல் புள்ளிகள் நடிகர்- நடிகைகள் தொழிலதிபர்கள் முதல் நண்பர்கள், உறவினர்கள் என 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை பங்கேற்கவுள்ளனர்.
இதனால், திருமணம் நடைபெறும் இடம் அரண்மனை போன்றே அமைக்கப்பட்டுள்ளது.
திருமணத்தில் 30
ஆயிரம் விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர். விருந்தினர்கள் பலர் ஹெலிகொப்டர்களில் வரவிருப்பதால் திருமணம் நடைபெறும் இடத்தின் அருகே 15 ஹெலிபேடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
திருமணத்தில் மட்டும் 5 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர். திருமணத்திற்காக இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து அரிய வகை மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
https://youtu.be/_lSIVOO7hks
0 comments:
Post a Comment