யாழ்ப்பாணத்தில் நலன்புரி நிலையங்களில் வசிக்கும்,
காணிகள் கொள்வனவு செய்வதற்கு
88 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கம்
யாழ்ப்பாணத்தில் காணப்படும் நலன்புரி நிலையங்களில் உள்ளக ரீதியில் இடம்பெயர்ந்த 971 குடும்பங்கள் இன்னும் வசித்து வருகின்றனர். அவற்றில் 682 குடும்பங்கள் தமது சொந்த இடங்களை இழந்தவர்களாக காணப்படுகின்றனர்.
அவற்றுள் 462 குடும்பங்களை வேறு இடங்களில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதுடன், ஏனைய குடும்பங்களை குடியமர்த்த இடங்களை தேட வேண்டியுள்ளது.
எஞ்சிய 220 குடும்பங்களையும் குடியமர்த்துவதற்கு தேவையான அரச காணிகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்மையினால், ஒரு குடும்பத்துக்கு 20 பேர்ச்சஸ் வீதம் தனியார் இடங்களில் கொள்வனவு செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு தேவையான தனியார் இடங்களை யாழ்ப்பாண மாவட்ட செயலாளரின் ஊடாக கொள்வனவு செய்வதற்கு 88 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கிக் கொள்வதற்கு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளது
இது தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment