இலங்கை பரீட்சை திணைக்களத்தின் அச்சகத்தை
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி
530 மில்லியன் ரூபா செலவில் நவீன மயப்படுத்த
அமைச்சரவை அங்கீகாரம்
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வருடமொன்றுக்கு 270 பரீட்சைகள் நடாத்தப்படுவதுடன், அவற்றுக்கு தேவையான 160 இலட்சம் வினாத்தாள்கள் குறித்த திணைக்களத்தின் அச்சகத்தில் அச்சிடப்படுகின்றன. குறித்த வினாத்தாள்களின் இரகசியத்தன்மையினை பாதுகாத்து எவ்வித பிழையும் இன்றி குறித்த வினாத்தாள்களை அச்சிடுவதற்காக குறித்த அச்சகத்தை நவீன மயப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனடிப்படையில்
530 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் இலங்கை பரீட்சை திணைக்களத்தின் அச்சகத்துக்காக டிஜிடல் தொழில்நுட்பத்துடன் கூடிய அச்சு இயந்திரம் ஒன்று மற்றும் பிற உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினால் யோசனைகள் முன்வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment