கார்குண்டு
தாக்குதல் - 9 பேர் பலி
ஈராக் நாட்டின் சலாஹுதீன் மாகாணத்தில் உள்ள திக்ரித் நகரில்
இன்று தீவிரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 130 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திக்ரித் நகரின்
நுழைவு வாயிலில் உள்ள சோதனைச்சாவடி அருகே இன்று தீவிரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில்
5 மாணவிகள், ஒருபெண், 3 பொலிஸார் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 25-க்கும் அதிகமானவர்கள் அப்பகுதியில் உள்ள
ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி
எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படும் நிலையில் இன்றைய தாக்குதலுக்கு
எந்த இயக்கமும் பொறுப்பேற்க முன்வரவில்லை.
0 comments:
Post a Comment