கீரிமலை, நல்லிணக்கபுரம் கிராமம்
மக்களிடம்
கையளிக்கும் நிகழ்வு
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன தலைமையில்
எல் ரி ரி ஈ யினரின் பயங்கரவாத நடவடிக்கைகளின் காரணமாக
அகதிகளாகி யாழ்ப்பாணத்தில் 31 நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 971 குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் திட்டத்தின்
முதலாவது கட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள 100 வீடுகளைக்கொண்ட காங்கேசன்துறை, கீரிமலை, நல்லிணக்கபுரம் கிராமத்தை மக்களிடம்
கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று 31 ஆம் திகதி பிற்பகல் நடைப்பெற்றது.
வீடுகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகளினால் ஜனாதிபதிக்கு ஒரு
விசேட நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டது. தமக்கு வழங்கிய வாக்குறுதியை
நிறைவேற்றி இந்த வீட்டுத்திட்டத்தை நிர்மாணித்தமை தொடர்பாக ஜனாதிபதிக்கு நன்றி
தெரிவித்து ஒரு விசேட குறிப்பும் சின்னத்துடன் வைக்கப்பட்டிருந்தது.
மைலிட்டி பிரதேச பாதுகாப்புப் படையினரின் வசமிருந்த 454
ஏக்கர் காணிகள் மீண்டும்
அதன் உரிமையாளர்களிடம் வழங்குவதற்கான உத்தியோகபூர்வ கடிதம் மாவட்ட செயலாளரிடம்
ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment