எட்டு முஸ்லிம் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்

எதிர்கட்சிகளின் கேள்விகளால்  முதல்வர் கொதிப்பு!


இந்திய மத்திய பிரதேசத்தில், 'சிமி' எனப்படும், இஸ்லாமிய மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த, எட்டு முஸ்லிம் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதால், கொதிப்படைந்துள்ள அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், ''இதை அரசியலாக்க வேண்டாம்,'' என, ஆவேசத்துடன் கூறியுள்ளார். இதற்கிடையில், 'என்கவுன்டர் சம்பவம் உண்மையானது' என, பொலிஸ் தரப்பும் விளக்கம் அளித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.., அரசு உள்ளது. இம்மாநில தலைநகரான போபால் மத்திய சிறையில் இருந்து, நேற்று முன்தினம் தப்பிய, 'சிமி' அமைப்பை சேர்ந்த எட்டு முஸ்லிம் மாணவர்களை, பொலிஸார் சுட்டுக் கொன்றனர். எதிர்க்கட்சிகள், இந்த என்கவுன்டர் தொடர்பாக பல சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
இதற்கிடையில், பொலிஸார் நடத்திய என்கவுன்டர் தொடர்பான வீடியோ காட்சி ஒன்றை, தனியார் தொலைக்காட்சி வெளியிட்டது. அதில், ஆயுதம் இல்லாமல் இருந்த நபர்கள் மீது பொலிஸார்சரமாரியாக சுடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது; இதுவும், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போபால் சிறையில் இருந்து தப்பிய, 'சிமி' அமைப்பை சேர்ந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக, சி.பி.., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக, சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து, அவர்களின் வழக்கறிஞர் பர்வீஸ் ஆலம் கூறியிருப்பதாவது: நடந்துள்ள சம்பவங்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை; இது போலி என்கவுன்டர். இதுகுறித்து, சி.பி.., விசாரணை நடத்த வேண்டும் என்று, .பி., ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சிமி அமைப்பினர்' என்கவுன்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக, தேசிய மனித உரிமை கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
போபால் சிறையில் இருந்து தப்பியோடிய கைதிகள் சுட்டதால், அவர்கள் மீது திருப்பிச் சுட்டதாக, மூத்த பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, .பி., மாநில அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ''சிமி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஏன் சிறையில் இருந்து தப்பிக்கின்றனர்; ஹிந்து பயங்கரவாதிகள் தப்பிக்க முயற்சி செய்வதில்லையா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்,'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதே போல், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், பல கேள்விகள் மற்றும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளனர். 'என்கவுன்டர் விவகாரம் தொடர்பாக, நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்றும் வலியுறுத்தியுள்ளனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top