காஷ்மீர் பிரதேசத்தில் 219 பாடசாலைகள் தொடர்ந்து மூடல்!
மாணவர்களின் கல்வி பாதிப்பு!!
காஷ்மீரின் எல்லையோரப் பகுதியில் உள்ள பாடசாலைகளை மூடுமாறு படைகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றன என அறிவிக்கப்படுகின்றது.
எல்லையில் இந்தியா - பாகிஸ்தான்., படைகளிடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை காரணமாக காஷ்மீரின் எல்லையோரத்தில் இருக்கும் 200 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. ஜம்முவில் உள்ள 174 பாடசாலைகள் மற்றும் சம்பா மாவட்டத்தில் உள்ள 45 பாடசாலைகளையும் மறுஉத்தரவு வரும் வரை திறக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தனியார் பாடசாலைகளுக்கும் பொருந்தும் கடந்த 4 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் இவ்வாறு மூடப்பட்டுள்ளன. என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லையில் உள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்க அக்டோபர் 3 ஆம் திகதி மாநில அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் எல்லையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, மறுஉத்தரவு வரும் வரை சர்வதேச எல்லை மற்றும் ஜம்முவில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பாடசாலைகளை மூட நவம்பர் 1 ம் திகதி முதல் உத்தரவிட்டுள்ளதாக ஜம்மு துணை கமிஷனர் சிம்ரன் தீப் சிங் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment