வகைப்படுத்திய
குப்பைகளை சேகரிக்கப்படும் திட்டம்
இன்றிலிருந்து
அமுல்
இன்று நவம்பர் 1 ஆம் திகதி தொடக்கம் வீடுகள், வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட சகல அரச மற்றும்
தனியார் நிறுவனங்களும் குப்பைகளை வகைப்படுத்தி அகற்றுவதற்காக தயார் செய்யப்பட
வேண்டும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சு அறிவித்துள்ளது..
கடந்த ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி இடம்பெற்ற அனைத்து மாநகர சபைகளினதும்
ஆணையாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் போதே எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய
உக்கக்கூடியன, உக்காதன, பிளாஸ்டிக் - கண்ணாடி ஆகிய மூன்று வகைகளாக,
குப்பைகள்
வகைப்படுத்தப்பட்டு அவற்றை சேகரிப்பதற்காக தயார் நிலையில் வைக்க வேண்டுமென அமைச்சு
அறிவித்துள்ளது.
அவ்வாறு தயார் செய்யப்படாத வீட்டுக்கழிவுப்பொருட்கள்
நகரசபையால் அகற்றப்படமாட்டாதென அமைச்சு அறிவித்துள்ளது.
நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மாநகர சபைகளிலும் குறித்த
விடயம் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, இது வெற்றியளிக்கும் பட்சத்தில் நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கும்
அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு இன்று நவம்பர் 1 ஆம் திகதி ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்
ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை குப்பைகள் தொடர்பில் முறையற்ற விதத்தில்
நடந்துகொள்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குப்பைகளை முறையற்ற விதத்தில் கொட்டுபவர்கள், சூழலை மாசுபடுத்துவோர் தொடர்பில் அவசர தகவல்களை
வழங்க 119 என்ற அவசர
பொலிஸ் முறைப்பாடு இலக்கத்திற்கும் பின்வரும் சுற்றுச் சூழல் பொலிஸ் பிரிவு
தொலைபேசிகளுக்கும் அறிவிக்கலாம். 0112 58 71 24, 0112 59 31 11
0 comments:
Post a Comment