வட
கொரியா சர்வாதிகாரியின் மனைவிக்கு என்ன ஆனது?
பரவும்
வதந்திகள்
வட கொரியா சர்வாதிகாரியான கிம் யோங் அன்னின் மனைவி கடந்த 7 மாதங்களாக பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்காத
காரணத்தினால் அவரை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.
வட கொரியா சர்வாதிகாரியான கிம் யோங் அன் கடந்த 2012ம் ஆண்டு Ri Sol-ju என்பவரை தனது மனைவியாகவும், வட கொரியா நாட்டின் முதல் குடிமகளாகவும்
அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து கணவரான கிம் யோங் அன்னுடன் இணைந்து பல்வேறு
பொது நிகழ்ச்சிகளில் Ri Sol-ju பங்கேற்று வந்துள்ளார்.
கடந்த மார்ச் 28ம் திகதி பொது நிகழ்ச்சி ஒன்றில் கிம் யோங் அன்னுடன் Ri
Sol-ju பங்கேற்றுள்ளார்.
ஆனால், இந்நிகழ்விற்கு பிறகு அவர் பொதுமக்கள் முன்னிலையில் எவ்வித நிகழ்ச்சியிலும்
பங்கேற்காத காரணத்தால் தற்போது பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.
இது குறித்து சில அரசியல் வல்லுனர்கள் பேசியபோது, ‘ஒருவேளை Ri Sol-ju தற்போது கர்ப்பமாக இருப்பதால் வெளியே வராமல்
இருக்கலாம்.
இல்லையெனில், கிம் யோங் அன்னிற்கு அடுத்தப்படியாக அதிகாரம் படைத்த அவரது
இளைய சகோதரியான Kim Yo-jong உத்தரவின் பேரில் அவர் வெளியே வராமல் இருக்க வாய்ப்புள்ளது.
இதுமட்டுமில்லாமல், சர்வாதிகாரிக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் அவரது
மனைவி மிகவும் பாதுகாப்பான வட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கலாம்’ எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
வட கொரியா சர்வாதிகாரியின் மாமனார் ஒருவர் ஆட்சியை கைப்பற்ற
முயன்றதாக கூறி அவரை கிம் யோங் அன் கொடூரமாக கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment