இது எப்படியிருக்கிறது?

பெண்களின் தாலி காக்க; தாலி கட்டி வேட்புமனு தாக்கல்

தஞ்சாவூர் தொகுதியில், வேட்பாளர் ஒருவர் கழுத்தில், தாலி கயிறு கட்டி, வேட்புமனு தாக்கல் செய்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு, எதிர்வரும், 19ல் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல், நேற்றுடன் முடிவடைந்த  சூழலில், தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் ஆறுமுகம், 49, என்பவர் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்ய தஞ்சை, ஆர்.டி.., அலுவலகத்திற்கு வந்த ஆறுமுகம், தன் கழுத்தில் மஞ்சள் தாலி கயிற்றை கட்டி இருந்தார். அந்த கோலத்திலேயே, வேட்பு மனுதாக்கல் செய்ய, அது பரபரப்பானது.

மதுவுக்கு அடிமையான கணவனால், பாதிக்கப்படும் பெண்கள் எண்ணிக்கை தமிழகத்தில், நாளுக்கு நாள் அதிகாரித்து வருகிறது. அவர்களின் கணவர்களை இழந்த பெண்களுக்கு ஆதரவாக மதுவை ஒழிக்க வேண்டும் என தேர்தலில் போட்டி யிடுகிறேன்.அரசு, பெண்கள் தாலியை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான், இப்படி தாலியும்; கழுத்து மாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தேன் என  தாலி கயிற்றை கழுத்தில் கட்டி இருந்த ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top