மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்ற மாணவனின்
வீட்டுக்கு சென்று பாராட்டி பரிசு வழங்கிய
மாகாண சபை உறுப்பினர்
சட்டத்தரணி றிஸ்வி ஜவஹர்ஷா
-ரிம்சி ஜலீல்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தேற்றி சித்தியடைந்த குருநாகல் மாவட்டம் தொடங்கஸ்லந்த தொகுதிக்குட்பட்ட தல்கஸ்பிடிய பிரதேசத்தில்அமைந்துள்ள அல்-அஸ்ரக் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 183 புள்ளிகளைபெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்ட செல்வன் அர்கம் நதீரைபாராட்டி பரிசு வழங்கி வைப்பதற்காக வடமேல் மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ.ல.மு.கா குருநாகல் மாவட்ட பிரதான அமைப்பாளருமான சட்டத்தரணி றிஸ்வி ஜவஹர்ஷா நேற்று (01) ம் திகதி அந்த மாணவரின் வீட்டுக்கு சென்று தனது வாழ்த்துக்களைதெரிவித்ததுடன் பரிசுப் பொருட்களையும் வழங்கி கெளரவித்தார்.
இந்த நிகழ்வின் போது சட்டத்தரணி றிஸ்வி ஜவஹர்ஷா கருத்து தெரிவிக்கையில்,
பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை நாம்எந்தளவிற்கு பாராட்டுகின்றோமோ அதே போல அவர்களது எதிர்காலக் கல்விக்கும் நாம் உற்சாகமளிக்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் எதிர்காலத்தில் ஒருசிறந்த புத்திஜீவியாக முடியும் என அவர் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment