சவூதி இளவரசர்களில்
ஒருவருக்கு சிறை தண்டனை
சவுக்கடி கொடுக்கவும் ஜித்தா நீதிமன்றம் உத்தரவு!
தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிப்பு
சவூதி அரேபியாவை ஆளும் மன்னர் குடும்பத்தை சேர்ந்த இளவரசர்களில்
ஒருவருக்கு ஜித்தா சிறையில் சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.
சவூதி அரேபியா நாட்டில் இஸ்லாமிய சன்னி பிரிவினரின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், இஸ்லாமிய ஷரியத் சட்டங்களின்படி, தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
அந்த வகையில்,
1970-ம் ஆண்டு தனது நண்பர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சவூதி இளவரசருக்கு கடந்த மாதம் 19 ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அதைதொடர்ந்து, விபரம் வெளியிடப்படாத குற்றத்தை புரிந்ததற்காக சவூதி இளவரசர்களில் ஒருவருக்கு சிறை தண்டனை விதித்தும், சவுக்கடி கொடுக்கவும் ஜித்தா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, ஜித்தா நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசருக்கு சவூக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment