ஹிலாரிக்கு சிறுமி எழுதிய உருக்கமான கடிதம்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த ஹிலாரி கிளிண்டனுக்கு ஆறு வயது சிறுமி ஒருவர் உருக்கமான கடிதத்தை தன் கைப்பட ழுதியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பை எதிர்த்து களம் றங்கிய ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடைந்தார்.
தோல்விக்கு பின்னர் அவர் தனது உரையில், இந்த தோல்வியானது எனக்கு மிகுந்த வலியை தருகிறது, ஆனாலும் நான் அமெரிக்க நாட்டின் உரிமைக்காக தொடர்ந்து உழைப்பேன் என கூறினார்.
அவரின் இந்த உரையை பார்த்து மனம் வெதும்பிய Vanessa Erk (6) என்னும் சிறுமி ஹிலாரிக்கு தன் கைப்பட ஒரு கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளார்.
அதில், அன்புக்குரிய ஹிலாரி அவர்களுக்கு தேர்தலுக்கு பிறகு நீங்கள் ஆற்றிய உரையை நான் பார்த்தேன். நான் உங்களை விரைவில் சந்தித்து உங்களை கட்டியணைத்து கொள்ள விரும்புகிறேன்.
ஏனென்றால் உங்கள் மனம் மிகவும் அன்பு படைத்தாகும் என அதில் எழுதியுள்ள அந்த சிறுமி கடிதத்தின் கீழே உங்கள் நண்பர் Vanessa Erk என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த கடிதத்தின் மேலே Vanessa ஒரு படத்தையும் வரைந்துள்ளார். அதில் ஒரு மரத்தின் அருகில் பூக்கள் நிறைந்திருக்கும் சூழலில் ஹிலாரி கையை பிடித்து தான் நின்றிருப்பது போல ஒரு ஓவியத்தை அவர் வரைந்துள்ளார்.
இந்த கடிதமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
'Dear Hillary.. I hope I can meet you someday so I can give you a hug': Six-year-old pens heart-warming letter to defeated Democratic presidential nominee
- Vanessa Erk, six, wrote a letter to Hillary Clinton after watching her concession speech on Wednesday after losing election to Donald Trump
- The Massachusetts girl said she wanted to meet Clinton and hug her
- She said she wanted to hug Clinton 'because your heart has so much love'
- Clinton addressed young girls in concession speech after devastating loss
0 comments:
Post a Comment