பிரித்தானியாவில் அமைதியான முறையில்
தனது படிப்பை முன்னெடுத்து

சாதனை படைக்கும் ஜனாதிபதி மைத்திரியின் மகள்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டாவது மகளான தரணி சிறிசேன, பிரித்தானியாவில் மேற்படிப்பை படித்து வருகிறார்.

சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி பிரமாணம் செய்துக் கொண்ட சந்தர்ப்பத்திலேயே தரணியை முதல் முறையாக ஊடகங்கள் வாயிலாக காண முடிந்தது.

இந்நிலையில் அவர் மிகவும் அமைதியான முறையில் தனது கற்கை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

தற்போது பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் தனது சட்டத்தரணி பட்டத்தை மிகவும் சிறந்த முறையில் நிறைவு செய்து, சட்டத்தரணியாக தனது தொழிலை ஆரம்பிக்கவுள்ளார்.

வல்லுநராக தனது வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்க்கும் தரணி மேலும் பல பிரிவுகளில் சட்ட அறிவை விரிவாக்குவதற்கும், தனது தொழிலை விருத்தி செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.

அவர் சர்வதேச சட்டம் மற்றும் அகதிகள் தொடர்பிலான உலக சட்டம் குறித்து விரிவாக்கம் ஒன்றை பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் பெற்றுக் கொண்டுள்ள பட்டங்களுக்கமைய ஐரோப்பா, பிரித்தானியா போன்ற நாடுகளில் சேவை செய்வதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது.

அவர் பிரித்தானியாவில் தனது சட்டத்தரணி பட்டத்தை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அதில் கலந்துக் கொண்டனர்.

பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் ஏற்றுக்கொள்ள கூடிய பட்டம் பெற்ற தரணி, இலங்கை குறித்து சர்வதேச ரீதியில் காணப்படுகின்ற பிரச்சினை தொடர்பில் பங்களிப்பு செய்ய முடியும்.


எனினும் அவர் அமைதியான முறையில் தனது படிப்பை முன்னெடுத்து வருவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top