இந்தியா சென்றடைந்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியையும் சந்தித்தார்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன புகையிலை தடுப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று டெல்லி சென்றடைந்துள்ளார். இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி-யை சந்தித்து ஆலோசனையும் நடத்தியுள்ளார்.
புகையிலை பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக உலக சுகாதார தாபனத்தினால் நடத்தப்படும் விசேட மாநாட்டில் அதிதி உரை நிகழ்த்துவதற்காக இந்தியாவிற்கு பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று 6 ஆம் திகதி பிற்பகல் இந்தியாவின் பதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
உலக சுகாதார அமைப்பு சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறம் சர்வதேச புகையிலைக்கு எதிரான மாநாடு இந்தியாவில் நாளை (திங்கட்கிழமை) முதல் 12 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 180 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் தொடக்க விழாவில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அழைக்கப்பட்டுள்ளார். புகையிலை தடுப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று மாலை டெல்லி சென்றடைந்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மாலையில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். அப்போது இருநாட்டு நல்லுறவு குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
இதனையடுத்து, நாளை நடைபெறும் புகையிலை தடுப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். மாநாட்டை முடித்துக் கொண்டு நாளை மாலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொழும்பு திரும்புவார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக பதவி வகித்தார். அப்போது புகையிலை எதிர்ப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருந்தார். அதன் காரணமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment