ஈராக்கின் இரண்டு நகரங்களில்
தற்கொலைப்படை தாக்குதல்: 21 பேர் பலி
Suicide Bombings Kill 21, Wound Dozens
in Iraq
ஈராக்கின் இரண்டு நகரங்களில் ஆம்புலன்ஸ்களை கொண்டு சோதனை சாவடி
மற்றும் கார் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
ஈராக்
நாட்டின் திக்ரிக்
மற்றும் சமாரா
ஆகிய நகரங்களில்
ஆம்புலன்ஸ்களை கொண்டு தீவிரவாதிகள் இன்று தற்கொலைப்
படை தாக்குதல்கள்
நடத்தினர். இந்த இரண்டு தாக்குதல்களில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
திக்ரித்
நகரின் நுழைவு
வாயிலில் உள்ள
சோதனைச்சாவடி அருகே தீவிரவாதிகள் நடத்திய
கார்குண்டு தாக்குதலில் 5 மாணவிகள், ஒருபெண், 3 பொலிஸார்
என மொத்தம்
13 பேர் உயிரிழந்தனர்.
இந்த
சம்பவத்தில் காயமடைந்த 25-க்கும் அதிகமானவர்கள் அப்பகுதியில்
உள்ள ஆஸ்பத்திரிகளில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமாரா
நகரின் அல்-அஸ்கரி மசூதி
அருகே ஷியா
யாத்திரிகர்களின் கார் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்
படை தாக்குதலில்
8 பேர் உயிரிழந்தனர்.
அதில் இரண்டு
யாத்திரிகள் பலியாகினர்.
இரண்டு வருடங்களுக்கு மேலாக ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மொசூல் நகரின் பகுதிகளை மீட்கும் முனைப்பில் ஈராக் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் செயல்பட்டும் வரும் வேளையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
0 comments:
Post a Comment