வெள்ளை
மாளிகையிலிருந்து வெளியேறும்
ஒபாமாவின்
வெள்ளை மாளிகை புகைப்படங்கள்
White House Photographer Releases Favorite Images of Obama Through His
Presidency
அமெரிக்கா ஜனாதிபதியாக குடியரசு கட்சித்தலைவர் டொனால்ட்
டிரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி
ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதியான ஒபாமா தன்னுடைய காலத்தில்
வெள்ளை மாளிகையில் இருந்து கொண்டு என்னவெல்லாம் செய்தார் என்பது தொடர்பான
புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் கடந்த மே 1 ஆம் திகதி 2011 ஆம் ஆண்டு பின்லேடனை
தாக்கப்பட்ட போது அதை நேரடியாக அன்றைய ஜனாதிபதி ஒபாமா மற்றும் துணை ஜனாதிபதி ஜோ
பாய்டன் மற்றும் பாதுகாப்புத்துறை அணியினர் அனைவரும் சற்று ஆர்வத்துடன் பார்ப்பது
போன்று உள்ளது.
அதுபோன்று வரலாற்றில் அமெரிக்காவின் மூன்று ஜனாதிபதிகள்
ஒன்றாக காட்சி அளித்தனர். கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி 2010 ஆம் ஆண்டு நடந்த
பொது உரை ஒன்றிற்கு ஒபாமா முன்னாள் ஜனாதிபதிகளான கிளிண்டன் மற்றும் புஷ் ஆகியோரை
ரோஷ் கார்டனிற்கு அழைத்துச் சென்று சிறிது நேரம் கலந்துரையாடினார்.
அதை தொடர்ந்து கடந்து 2015 ஆம் ஆண்டு யூன் மாதம் 4 ஆம்
திகதி அமெரிக்காவில் உள்ள ஒவல் அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் மகளான
எல்லாவுடன் சற்று கிழே குணிந்து விளையாடி உள்ளார்.
மேலும் கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி 2013 ஆம் ஆண்டு
அவரின் தலைமை பணியாளர் மேக்டொனாக் என்பவரின் குழந்தை பிறந்த நாளுக்கு ஆச்சரியமாக
பிறந்தநாள் கேக் ஒன்றை கொடுத்தது மட்டுமில்லாமல் அதை அமெரிக்காவின் வெஸ்ட்விங்
அலுவலகத்திலும் கொண்டாடியுள்ளார்.
இதே போன்று பல புகைப்படங்கள் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான
பராக் ஒபாமாவின் சில சுவாரஸ்யமான புகைப்படங்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.
0 comments:
Post a Comment