கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை 
============================================

'சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி

உண்மைக்கு புறம்பானது'

 வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப். றஹ்மான் தெரிவிப்பு



டெங்கு நோய் காரணமாக ஓரிரு  நாட்களுக்கு முன்னர் சாய்ந்தமருதைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவர் மரணமடைந்தது யாவரும் அறிந்ததே...
இம்மரணம் தொடர்பில் சமூக வலைத்தளங்களூடாக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மீது நாளுக்குநாள் பல்வேறு குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இது தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று 15 ஆம் திகதி மாலை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில், வைத்திய அத்தியட்சகர் டாக்டர்..எல்.எப். ரஹ்மான் தலைமையில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில், சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் டாக்டர் பீ.கே.ரவீந்திரன், சிறுபிள்ளை விசேட வைத்தியநிபுணர் டாக்டர் எஸ்.என். விதுரங்க சேரம், பொது வைத்திய நிபுணர் டாக்டர் ஜே..பந்துல செனவிரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்குப் பொறுப்பான வைத்திய அத்தியட்சகர் டாக்டர் .எல்.எப். றஹ்மான் தெரிவித்ததாவது,
கல்முனைஅஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 11 வயதுடைய சிறுவனின் மரணம் தொடர்பில், சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது'
'டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 11 வயதுடைய சிறுவன், கடந்த 4 ஆம் திகதி எமது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்டதிலிருந்து 6 நாட்களுக்குத் தேவையான இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை ங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன
9ஆம் திகதி வரைக்கும் சிறுவன் (நோயாளி) ஆபத்தான நிலையில் காணப்படவில்லை. 9ஆம் திகதி திடீரென ஏற்பட்ட அதிகளவான காய்ச்சல், வலிப்பு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சை மற்றும் சி.ரி ஸ்கேனுக்கு அனுப்பப்பட்ட போது மூளை வீக்கமடைந்து பாதித்திருந்தமை தெரிய வந்தது.
 டெங்கு நோயால் இவ்வாறு ஏற்படுவது அரிதாகும். இந்த நிலையில் மரணத்தை தடுப்பது கடினமாகும். எனவே டெங்கு பரவாமல் தடுப்பதில் பொதுமக்கள் ஆர்வத்தோடும் விரிப்புணர்வோடும் செயற்பட வேண்டும்.

 2016 ஆம் ஆண்டில் மட்டும் 292 பேருக்கு நாம் டெங்கு நோய்க்குரிய சிகிச்சை வழங்கியுள்ளோம். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திலிருந்து ஏற்கெனவே இரண்டு பேருக்கு எமது வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கியுள்ளோம். குறித்த சிறுவனின் உயிரிழப்பு துரதிர்ஷ்டவசமானது, தவிர்க்க முடியாதது' இவ்வாறு வைத்திய அத்தியட்சகர் டாக்டர் .எல்.எப். றஹ்மான் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top