குஷ்பு,....
பாக்கியராஜ்,....
செல்லமான பெற்றோரா,
கண்டிப்பான பெற்றோரா?
குழந்தைகளின்
பன்முகத்திறமைகளை ரசிப்பவர்கள் குஷ்பு, பாக்கியராஜ் இருவரும் தங்கள் பிள்ளைகளுக்குச்
செல்லமான பெற்றோரா
அல்லது கண்டிப்பான
பெற்றோரா எனக்
கேட்கலாம்!
குஷ்பு,....
கல்யாணத்துக்கு
முன்னாடி ஓய்வேயில்லாத
அளவுக்கு அதிகமான
படங்கள்ல நடிச்சாலும்,
கல்யாணத்துக்கு அப்புறம் என் குடும்பத்துடன்தான் அதிக நேரத்தைச் செலவழிக்கிறேன். கணவர்,
குழந்தைகளுக்காகவே நிறைய சினிமா
வாய்ப்புகளையும் குறைச்சுக்கிட்டேன். குறிப்பாக என் பொண்ணுங்க
அவந்திகா, ஆனந்திதா
ரெண்டு பேரும்தான்
எனக்கு உலகம்.
அவங்களைக் கேட்டுதான்
நான் எந்த
ஒரு முடிவையும்
எடுப்பேன். என்னோட டிரெஸ்ல இருந்து பல
விஷயங்களிலும் அவங்களோட முடிவே இறுதியானது! சின்ன
வயசுல இருந்து
இப்போ வரைக்கும்,
என்னை கிண்டல்
செய்றதுதான் என் பொண்ணுங்களுக்குப் பிடிச்ச பொழுதுபோக்கு.
அதை என்ன
ஹர்ட் பண்ண
செய்யமாட்டாங்க, ரசிக்கிற விதமா செய்வாங்க. அதனால
நானும் ரசிப்பேன்.
காலையில என்
பொண்ணுங்களை நான்தான் ஸ்கூலுக்கு கொண்டுபோய் விடுவேன்.
மாலை ஆறு
மணிக்கு மேல
எந்த வெளி
வேலைகளையும் செய்யாம குடும்பத்தைக் கவனிக்க வீட்டுக்கு
வந்துடுவேன். என் வீடும், குடும்பமும் அழகானது!
என்னதான்
என் பொண்ணுங்க
மேல அளவுக்கடந்த
பாசம் வெச்சிருந்தாலும்,
அவங்க நல்ல
விஷயங்களை செய்றப்போ
முதல் ஆளா
இருந்து பாராட்டி
ஊக்கம் கொடுக்குற
மாதிரியே, அவங்க
எதாச்சும் தப்பு
செய்தா அதை
முதல் ஆளா
கண்டிக்கிறதும் நான்தான். பொண்ணுங்களோட சின்ன வயசுல
இருந்து இப்போ
வரைக்கும் அவங்க
செய்ற தவறை
சுட்டிக்காட்டி, இனி இப்படிச் செய்யக்கூடாதுன்னு வாய் வார்த்தையா திட்டுறதுல தொடங்கி,
பல நேரங்கள்ல
கடுமையான கண்டிப்போட
அடிச்சும் இருக்கேன்.
எப்பவும் என்
பொண்ணுங்ககிட்ட பேலன்ஸ்டு அம்மாவாத்தான் இருப்பேன்!
பாக்கியராஜ்: ,....
கல்யாணத்துக்கு
முன்னாடியும் பின்னாடியும் ரொம்பவே பிஸியா, நடிகரா,
இயக்குநரா, திரைக்கதை ஆசிரியரா வேலை செய்துட்டு
இருந்தேன். அதனால பெரும்பாலும் நான் வீட்டுலயே
இருக்கமாட்டேன். சினிமா வேலை முடிஞ்சு நான்
ராத்திரி வீட்டுக்கு
வரும்போது, என் குழந்தைங்க சரண்யா, சாந்தனு
ரெண்டு பேரும்
தூங்கியிருப்பாங்க. காலையிலயும் சீக்கிரம்
ஷூட்டிங் கிளம்பிடுவேன்.
கல்யாணத்துக்குப் பிறகு, தன் சினிமா கெரியரை
கைவிட்ட என்
மனைவி பூர்ணிமாதான்
மனைவியா, அம்மாவா,
குடும்பத் தலைவியா
என் வீட்டை
பொறுப்பா கவனிச்சுக்கிட்டாங்க.
என் குழந்தைங்களோட
குழந்தைப்பருவ சேட்டைகளை அதிகமாப் பார்த்து ரசிக்கிற
பாக்கியம் எனக்கு
கிடைக்கலைன்னு இப்போவரைக்கும் வருத்தப்படுறேன்.
0 comments:
Post a Comment