முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக
முஸ்லிம் எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் பேசமாட்டார்களா?
வை.எல்.எஸ். ஹமீட் ஏக்கம்
(எஸ்.அஷ்ரப்கான்)
முஸ்லிம்
பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களின்
பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசமாட்டார்களா?
என்று 'பாராளுமன்றம்'
ஏங்கித்தவமிருக்கிருக்கின்றது. சில முஸ்லிம்
பாராளுமன்ற உறுப்பினர்களின் குரல் எவ்வாறு இருக்கும்?
என்று காது
குளிர கேட்டுவிடவேண்டும்,
என்பது 'பாராளுமன்றத்தின்
நீண்ட நாள்
ஆசை'.என்று
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின்
செயலாளர் நாயகம்
வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார்.
இறக்காமத்தில்
புத்தர் சிலை
வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தனது
கண்டனத்தைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடும்போது,
அண்மையில்
இலங்கைக்கான புதிய பொருளாதாரத்திற்கான திட்டத்தை சமர்ப்பித்து
பிரதமர் பாராளுமன்றத்தில்
உரையாற்றியபோது, இந்நாட்டில் பயங்கரவாதம் தோன்ற முதல்
சில நாடுகள்
எவ்வாறு இலங்கையை
முன்மாதிரியாக கொள்ள முற்பட்டன, எவ்வாறு அன்று
ஜப்பானிய முதலீடு
இலங்கையை நோக்கி
வந்தது என்றும் பின்னர்
நாட்டில் நிலவிய
சூழ்நிலை காரணமாக
திரும்பிப் போனதென்றும் குறிப்பிட்டார்.
இந்த
நாட்டில் பௌத்தத்தின்
பெயராலும் பௌத்தர்களின்
பெயராலும் இனவாதம்
விதைக்கப்படாமல் இருந்திருந்தால் பயங்கரவாதம்
உருவாகியிருக்காது. நாடும் இந்த
ஏழ்மை நிலைக்கு
தள்ளப்பட்டிருக்காது. ஆனாலும் இந்த
இனவாதிகள் திருந்துவதாகவும்
இல்லை, இந்த
நாடும் பாடங்கள்
எதையும் கற்றுக்கொண்டதாகவும்
தெரியவில்லை. அதன் விளைவுதான் இவ்வாறான பௌத்தர்களே
இல்லாத இடத்தில்
புத்தர் சிலை
வைக்கும் முட்டாள்தனமான
செயற்பாடுகளாகும்.
இதில்
இன்னும் துரதிஷ்டவசமானது
என்னவென்றால் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்
தமிழ் ஊடகங்களில்
இந்த சிலை
வைப்பிற்கெதிராக அறிக்கை விடுகின்றார்களே தவிர இந்த
சிலையை அகற்றுவதற்கு
என்ன நடவடிக்கை
எடுத்திருக்கின்றார்கள்; என்று கூறுகின்றார்கள்
இல்லை. இன்று
21 முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் . அமைச்சர் ஹலீம் மாத்திரம் இது
தொடர்பாக சில
நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.
இன்று
அரசாங்கம் முழுக்க
முழுக்க முஸ்லிம்
பாராளுமன்ற ஆசனங்களில் தங்கித்தான் ஆட்சி செய்கின்றது.
இந்த 21 பேரும்
நினைத்தால் நாளைகூட ஆட்சியைக் கவிழ்க்கலாம். ஆனால்
அடாத்தாக வைக்கப்பட்ட
ஒரு சிலையையே
அகற்ற முடியாமல்
இருக்கின்றார்கள். அல்-அக்ஷா பள்ளிவாசல் விசயத்தில்
சூறா கவுன்சிலின்
கூட்டத்தில் அரசாங்கம் அரசாங்கத்தின் நிலைப்பாடு பிழை
என்று சொல்லத்
தெரிந்த முஸ்லிம்
பிரதிநிதித்துவங்களுக்கு அரசாங்கத்திடம் அதனைக் சென்று
தெரிவிக்கத் தெரியவில்லை. தமிழில் வீறாப்பாக அறிக்கை
விடத்தெரிந்தவர்களுக்கு அவற்றை ஆங்கில
ஊடகங்களுக்கு கூறுவதற்கு தைரியமில்லை; ஏனெனில் அது
அரசின் காதுகளை
எட்டிவிடும், அரசு தம்மைப் பற்றி பிழையாக
நினைத்துவிடும்; என்பதனால்.
இந்நிலையில்
முஸ்லிம் தனியார்
சட்டம் , அரசியலமைப்பு
மாற்றம் ஆகியவற்றையும்
இவர்கள் கோட்டை
விட்டுவிடுவார்களோ? என்கின்ற கவலை
சமூகத்தில் சிலருக்கு மத்தியில் இருக்கின்றது, பலருக்கு
அதைப்பற்றியும் கவலை இல்லை. இந்நிலையில் முஸ்லிம்
சமுதாயம் என்ன
செய்யப் போகின்றது
. தம் தலைவிதியை
தாமாக ஒரு
சமுதாயம் மாற்றாதவரை
அச்சமூகத்தின் தலைவிதியை இறைவனும் மாற்றமாட்டான் . ( அல்குர்ஆன் ) எனவே தம் தலைவிதியை
மாற்ற அவசரமாக
முஸ்லிம் சமுதாயம்
தாமாக விழித்துக்
கொள்ளாதவரை முஸ்லிம் சமுதாயத்தின் எதிர்காலம் மிகவும்
இருள் சூழ்ந்ததாகவே
இருக்கப் போகின்றது.
0 comments:
Post a Comment