கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின்
முன்னாள் அதிபர் ஏ.எச்.ஏ.பஷீர் அவர்களுக்கு கெளரவம்
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபர்
அல்-ஹாஜ் ஏ.எச்.ஏ.பஷீர் அவர்களின் 26 வருட அதிபர் சேவையைக் கெளரவிக்கும் பாராட்டு
விழா இன்று 14 ஆம் திகதி திங்கள்கிழமை கல்லூரியின் எம்.சி.ஏ.ஹமீது அரங்கில்
இடம்பெற்றது.
ஓய்வு பெற்ற அதிபரின் சேவையைக் கெளரவிக்கும் இப் பாராட்டு விழாவில் முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்
பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், மாகாண சபை உறுப்பினர் கே.எம். அப்துல் ரஸ்ஸாக் (ஜவாத்) உட்பட கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள்,
மாணவர்கள், பெற்றோர்கள் என பெரும் எண்ணிக்கையானோர் கலந்து ஓய்வு பெற்ற அதிபரை பாராட்டிக்
கெளரவித்தனர்.
சேவை நலன் பாராட்டு விழா.......
#எங்கள் செம்மலுக்கு.....!
*************************
சாந்தம் தவழுகின்ற வதனம்....
சரித்திரமாகிக் கொண்டிருக்குகிறது....
உத்தரங்களை யெல்லாம்....
ஒன்று சேர்த்துக் கோர்த்து....
கழுத்துக்கு சரங்களாய்....
அணிவித்து....
அகம் குளிரப் போகின்றார்கள்....
மின்னல்களும் ஒன்று திரண்டு....
மேள...தாளங்களோடு....
பட்டாசுகளும் கொளுத்தி....
பாராட்டி நிற்கப்போகின்றன....
எங்கள்....
பள்ளிக்கூடப் பூக்களும்....
பண்ணோடு...தலையசைத்து....
பூத்திடும் புன்னகையாய்....
புள்ளினங்களும் தேடிவந்து....
பூக்களைச் சொரிய....
காத்திருக்கின்றன....
நல்லவர்களுக்கு....
நல்லதே நடக்கும்...என்பதற்கு....
நல்லதொரு சான்று....
இவை....!
ஆமாம்..!
சாய்ந்தமருதூரின்...சங்கையான....
சாஹுல் ஹமீது உடையார்....
அலிமா நாச்சி தம்பதியின்....
தலைமகன்....
நங்கை நஜ்முன்னிஷாவின்....
நெஞ்சில் வாழும் நாயகர்....
ஷெரோன்,றோஷன்,ஸிபர்,சுஜா....
எனும்....
நான்கு மக்களினதும்....
நாமம் சொல்லவைத்த...நயாகரா....
அதிபர்மணி...அப்துல் பஸீர்....
அவர்களுக்கு....
அழகிய பாராட்டுவிழா...இன்று...!
கல்முனை....
மஹ்மூத் மகளிர் கல்லூரி....
மண்ணிற்கும்...மலர்களுக்கும்....
வாசம் தந்தவர்....
சிரசை உயர்த்தி எல்லோரும்....
செப்புவார்....
"எங்கள் பஸீர் சேர்...."
"எங்கள் பஸீர்சேர்...."
ஓ....! ஓய்வுபெற்று...ஆறாண்டுகள்....
ஓடிப்போயினவா..?!
ஆனாலும்....உங்கள் நாமம்....
அகங்களிலிருந்தும் மறையவில்லை....
ஆழப் பதிந்ததை...எவராலும்....
அசைக்கவும் முடியவில்லை...!
முகாமைத்துவத்தின் முதுகெலும்பு....
வீண்....
முனகலுக் கெல்லாம்....
முதுகு சொறிபவரல்ல...நீங்கள்...!
கட்டடங்கள் பெரிகின....
கல்வியும் உயர்ந்தது....
எத்தனை பிரிவுகள்....
எல்லாமே...வெற்றிப் படிகள்....
சத்தான கல்வியினை....
சத்தமே இல்லாது....
சகலருக்கும்....
கிடைக்கச் செய்தீர்கள்....
அத்தனைபேரும் இன்று....
ஆவல் ததும்ப நிற்கின்றார்....
உங்கள் வரவுக்காக...!
ஆசிரியர் நலனில்....
அக்கறை...அதிகம் உங்களுக்கு...!
ஓசியில் பிழைப்போரை....
உள்ளே எடுக்க மறுத்தீர்கள்....
வாசிக்காய் வாயசைப்போர்க்கு....
வழியும் விடவில்லை...நீங்கள்....
பேசித் தீர்ப்பீர்கள்....
பிரச்சினைகள்...எதுவானாலும்....
ஆசித்து நிற்கின்றார்....அதனால்....
அடிக்கடி...உங்கள்....
ஆளுமையை எண்ணி யெண்ணி...!
கல்லூரியில்....
காலைமுதல்...இரவுவரை....
இருந்து...கவனிப்பதுதான்....
இந்த வெற்றியின் இரகஷியமோ....
என இரைவார் சிலர்....
ஆனால்....
காலத்தைக் கணித்து....
காரியம் ஆற்றுவதன் ஆளுமையில்தான்....
அந்தக் கைங்கரியமே...இருக்கிறது....
என்பேன்...நான்...!
வேளைக்கு வந்து....
வேலையாற்றுவதில்...மட்டும்....
வெற்றியில்லை....
நாலையும்...நயமுற யோசித்து....
நமக்காக மட்டுமன்றி....
நம்பியவர் களுக்காகவும்....
துணை நிற்பதிலும்....
உண்டு அது....
என்று உணர்த்தினீர்கள்....
தானாய்க் கனிய வேண்டும்....
தடியாய் அடிப்பதில்....
தகுந்த சுவை கிடையாது....
தத்துவம் இதனை....
அறிந்து வைத்திருந்தாலோ....
அதற்காக உழைத்தீர்கள்...!
"அதிபர் என்பவர்...."
உதிரம்போல் ஓடவேண்டும்....
உள்ளும்...புறமும்....
விதி இருப்பதால் மட்டும்....
வேலையில்லை....
விளக்கமாகவும் இருக்க வேண்டும்....
வெற்றிக் கம்பத்தை எட்டியவர்.....
நீங்கள்...!
படிப்பும்...பதவிகளும்....
பலரையும் இன்று....
பாறைகளாக்கி விட்டது....
மனங்களை ஆளும்....
மார்க்கமோ தெரியவில்லை....
திட்டமிட்டுச் செயலாற்றும்....
திறன்களும் இருக்க வேண்டும்....
கட்டளைகளுக்கு மட்டும்....
கழுத்துகளைத் திருப்புவோர்....
முட்டாளாகி...பின்னர்....
முடங்கித்தான் போவார்....
சட்டத்தால் சீர்செய்ய முடியாதே....
சகலவற்றையும்...?!
மட்டமாகிப் போகாது....
மனிதனாய்...சிந்திக்க வேண்டும்....
சிந்தித்தீர்கள்....
செய்தது...சிறப்பான நிர்வாகம்....
என்றார்கள்...அதனால்....
அருமையும்...பெருமையும்....
அடைந்தவர் நீங்கள்...!
இலக்கியமும்... கலையும்....
எல்லாத் துறைகளும்.....
இடம்பிடித் திருந்தது உங்களில்....
துலக்கமாக இருந்தீர்கள்....
தூய்மையாகவும்...வாழ்ந்தீர்கள்....
இலங்கியது உங்கள் பணிகள்...
இறைவனும் பொருந்திக் கொள்வான்....
எத்தனை...பட்டங்கள்....
இப்போதும் பதவிகள்....
இருந்தும்....
நீங்களாகவே இருக்கிறீர்கள்....
நினைக்கவும் வைத்தீர்கள்....
இத்தகைய பாங்குதான்....
எல்லோரையும் கவர்கிறது....
பண்பட்ட மனது உங்களுக்கு....
அதில்....
கண்பட்டு விடக் கூடாதே..?!
எனது....
கவிதையை நிறுத்தி....
ஆண்டுகள் பலநூறு....
அவனியில்....
வாழ வேண்டும்...நீங்களென....
வாழ்த்துகிறோம்....
அல்லாஹ்விடம்...பிரார்த்திக்கின்றோம்...!
------- கல்முனை ஜுல்பிகா ஷெரீப் ------
2016 - 11 - 14.
0 comments:
Post a Comment