ஸ்கூல் சலோ' ஆபரேசன்:
காஷ்மீரில் ராணுவம்தொடக்கம்
Army launches 'School Chalo' operation in South Kashmir
காஷ்மீர் மாநிலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் பாடசாலை குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு இந்திய ராணுவத்தினர் ஸ்கூல் சலோ ஆபரேசனை தொடக்கியுள்ளனர்.
டந்த ஜூலை மாதம், காஷ்மீர் மாநிலத்தில்  திவிரவாத இயக்கத்தை சேர்ந்த பர்கான் வானி என்பவரை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பெரும் கலவரம் மூண்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் பலியாயினர். தொடர்ந்து கலவரம் நீடித்து வரும் நிலையில் மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. சமீபத்தில், எல்லை பகுதியில் செயல்படும் பாடசாலைகளுக்கு தீ வைக்கப்பட்டது.
யூரி பகுதியில் இருந்த இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் சர்ஜிக்கல் அட்டாக் எனப்படும் அதிரடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டனஸ்கூல் சலோ ஆபரேசன்
இதுகுறித்து, விக்டர் படை பிரிவின் உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் அசோக் நெருலா கூறியிருப்பதாவது:
ராணுவ வீரனாக எல்லையை பாதுகாப்பதோடு மட்டுமல்லாது காஷ்மீரில் நிலவும் சமூக பிரச்னைகளை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். எல்லை நிலவும் அசாதாரண சூழல் காரணமாக மக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, பாடசாலை செல்லும் குழந்தைகளின் கல்வி சீரழிவது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண எனது படை பிரிவின் வீரர்களுடன் பேசினேன். கடந்த சில வாரத்தில் மட்டும் 30 பாடசாலைகள்  தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர் பயப்படுகின்றனர்.
நான் ஒரு ராணுவ அதிகாரியாக இருந்தாலும் இரண்டு குழந்தைகளுக்கும் தந்தை. எனவே, தந்தையின் கோணத்தில் பிரச்னைகளை அணுகுகிறேன். குழந்தைகள் கையில் கல் எடுப்பதற்கு பதிலாக புத்தகங்கள் தான் எடுக்க வேண்டும்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு ஸ்கூல் சலோ எனும் ஆபரேசனை திட்டமிட்டு தொடக்கியுள்ளோம். இந்த ஆபரேசனின் படி, பகல்காம் பகுதியில் 292 குழந்தைகளுடன் ராணுவ வீரர்களின் பாதுகாப்புடன் பாடசாலையை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுக்கு சிறந்த ஆசிரியர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது.

எங்கள் படை பிரிவின் வீரர்கள் பெற்றோர்களுடன் பேசி குழந்தைகளை பாடசாலை அனுப்ப சம்மதம் பெற்று வருகிறார்கள். கல்வியால் நல்ல மாற்றம் ஏற்படும் என நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top