ஜெயலலிதாவை நான் ஏன் பாக்கணும்?
மதுரை கூட்டத்தில் பொங்கிப் பேசிய விஜயகாந்த் !
மருத்துவமனையில் இருக்கும் ஜெயலலிதாவை நான் ஏன் போய் பார்க்க
வேண்டும். என் கட்சிக்காரன் ஆஸ்பத்திரியில இருந்தா போய் பார்ப்பேன். அவங்களை நான் ஏன்
பாக்கணும். அதான் போகலை," என மதுரை நடந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு பொது மேடைகளில் பங்கேற்றுள்ளார் விஜயகாந்த். கடந்த சட்டமன்ற தேர்தல்
பிரச்சாரத்துக்கு பின்னர் பொது மேடைகளில் தலை காட்டாமல் இருந்த விஜயகாந்த், திருப்பரங்குன்றம்
இடைத்தேர்த்ல் பிரச்சாரத்துக்காக மீண்டும் மேடையேறியுள்ளார்.
மக்கள் நலக்கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகியது, ஜெயலலிதா
அப்போலோவில் அனுமதி உள்ளிட்ட பல விஷயங்களில்
கருத்து தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்தார் விஜயகாந்த். பிரேமலதா தான் செய்தியாளர்களிடம்
கட்சி சார்ந்த விஷயங்கள் குறித்து பதிலளித்து வந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு
பின் அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் என்பதால், அரசியல் களத்த்ல் இவரது பேச்சு கவனத்துடன்
பார்க்கப்பட்டது.
அவனியாபுரத்தில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது.
மக்களுக்கக என் கட்சியினர் இருக்கிறார்கள், எனக்காக என் கட்சியினர்
இருக்கிறார்கள். அவர்களுக்காக நான் இருக்கிறேன். நான் ஜெயலலிதாவை ஆஸ்பத்திரியில் போய்
பார்க்கலைன்னு கேக்கறாங்க?. நான் ஏன் போகணும்? அவர் குணமாகி வரணும்னு தான் நினைக்கிறேன்.
அங்க போறவங்களோட நோக்கம் வேற, என் கட்சிக்காரன் ஆஸ்பத்திரியில இருந்தா போய் பார்ப்பேன்.
அவங்கள நான் ஏன் போய் பார்க்கனும், அதனால தான் போகலை.
யாரை கண்டும் எனக்கு பயம் இல்லை நானும் மதுரையில் பிறந்தவன்தான், திருப்பரங்குன்றம் முருகர்தான் என்னுடைய கடவுள்.
மக்கள் விரும்பும் தலைவர்கள் மட்டும்தான் ஆட்சிக்கு வர வேண்டும்... பணத்துக்காகவும், சீட்டுக்காகவும் என்றும் விலைபோக மாட்டேன். என்றும் மக்களுக்காக இருப்பேன். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
0 comments:
Post a Comment