முன்னாள் இராணுவ வீரர்கள் மீது கண்ணீர் புகை,
நீர்த்தாரை பிரயோகம்!
அங்கவீனமடைந்த முன்னாள் இராணுவ வீரர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் பெறும் கால எல்லையை (12 வருடங்கள்) பூர்த்தி செய்யாது இராணுவத்தில் இருந்து இடைவிலகிய அங்கவீனமடைந்த முன்னாள் இராணுவ வீரர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக, கொழும்பு-காலி வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைய முற்றபட்டமையை அடுத்தே பொலிஸாரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த இராணுவ வீரர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதியில் உள்ள லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக, இன்றுக்காலை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதேவேளை குறித்த அங்கவீனமடைந்த இராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் பெப்ரவரி முதல் இவர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும், பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களது போராட்டத்திற்கு நாட்டிலுள்ள பலர்
ஆதரவு தெரிவித்ததுடன் கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும், முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த மற்றும் பிக்குகள் நேரில் சென்று பார்வையிட்டதுடன், அவர்கள் மீது கைவைத்தால்
நாடு பாரிய விளைவுகளை காண நேரிடும் என எச்சரிக்கை விட்டிருந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் எரியும்
நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போல் மாறியுள்ளதோடு, எச்சரிக்கை விடுத்தவர்களின் பதிலடி
எப்படி இருக்கப்போகின்றது என்பது அனைவர் மத்தியிலும் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது.
0 comments:
Post a Comment