'NOT MY PRESIDENT!'
“ட்ரம்ப் எனது ஜனாதிபதி அல்ல”
டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்
'NOT MY PRESIDENT!'
Demonstrations
continue to sweep America as protesters including Madonna and Cher refuse to
accept Trump’s election win
அமெரிக்காவின்
புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக பாரியளவிலான ஆர்ப்பாட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ட்ரம்ப்பை
ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ள முடியாதென
அமெரிக்காவின் பிரதான நகரங்கள் பலவற்றில்
எதிர்ப்பு வெளியிட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நியோர்க்
நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் டொனால்ட் ட்ரம்பின்
வீடு அமைந்துள்ள பிரதேசத்தை சுற்றி வளைத்துள்ளதாக சர்வதேச
ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிக்காகோ
நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ட்ரம்ப்பின் சர்வதேச ஹோட்டல் மற்றும்
கோபுரத்தை சுற்றி வளைத்துள்ளனர். பொலிஸார்
சில வீதிகளை மூடிவிடுவதற்கு நடவடிக்கை
மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொஸ்டன்,
சீடல், போர்ட்லேன்ட் போன்ற பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டம்
முன்னெடுக்கப்படுகின்றது. சென்பெரென்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும்
ஆக்லாந்து போன்ற நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள்
மேற்கொள்ளபடுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
“ட்ரம்ப்
வேண்டாம்” , “அமெரிக்காவில் இனவாதம் இல்லை”, “ட்ரம்ப்
எனது ஜனாதிபதி அல்ல” போன்ற வாசகங்களுடன்
ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியில் இறங்கியுள்ளனர்.
இந்த
எதிர்ப்ப்பிற்காக அந்த நாட்டு பொரும்பான்மை
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் ஆதரவு
கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பிரதான
நகரங்களின் சில பல்லைக்கழகங்களில் பரீட்சை
பிற்போடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
டொனால்ட்
ட்ரம்பிற்கு எதிராக குற்றவியல் பிரேரணை
கொண்டுவர வேண்டும் என ஆர்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment