ஜி.எஸ்.பி வரிச்சலுகை விவகாரம்:
முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்றியமைக்க
யாருக்கும் அதிகாரம்
இல்லை!
SLTJ ஆர்ப்பாட்டம்; பஞ்சிகாவத்தையில் கடும் வாகன நெரிசல்
முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர அரசினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கண்டித்தும் நிறுத்தக் கோரியம் மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தினரால் இன்று பி.ப. எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
இதன் காரணமாக, பஞ்சிகாவத்தை சுற்றுவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
ஜி.எஸ்.பி வரி சலுகையை பெற்றுக்கொள்ள தனியார் சட்டங்களை மாற்ற அரசாங்கம் நடவடிக்கையை மேற்கொள்வதாக கூறி ஸ்ரீலங்கா தவ்ஜீத் ஜமா அத் அமைப்பினால் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் முஸ்லிம் மக்களின் மத சார்பான சட்டங்களை மாற்ற முற்படுவதாகவும் இதனால் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது கலாச்சாரத்தை பாதிக்கும் எனவும் குற்றம் சாட்டினர்.
முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு ஐ.நா சபைக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் எந்தவித அதிகாரமும் இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
மேலும், மதம் சார்பான சட்டங்களை மாற்றும் உரிமை யாருக்கும் கிடையாதெனவும் அதற்கு அனுமதிக்கவும் போவதில்லை எனவும் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பலத்த எதிர்ப்பினை வெளிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment