நாடளாவிய
ரீதியில் 1855 தொழுநோயாளர்கள்
நாடளாவிய ரீதியில் 1855 தொழுநோயாளர்கள்
அடையாளங்காணப்பட்டுள்ளதாக தொழுநோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 41 வீதமானோர் கிழக்கு
மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தொழுநோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர்
பிரியந்த கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் 155 சிறுவர்கள் தொழுநோயால்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 10 வருடங்களில் இரண்டு புதிய நோயாளர்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழுநோயை முற்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம்
பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment