சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில்
பிரபல யூதனும், நாஸ்திகவாதியுமான ஐன்ஸ்டைன் பெயரில்
மண்டபம் உள்ளதை உலமாக்கள் அங்கீகரிக்கிறார்களா?
(அஸ்லம்)
அம்பாறை
மாவட்டத்தைச் சேர்ந்த சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின்
முறைசாராக்கல்வி செயற்றிட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால்
அமைத்துக் கொடுக்கப்பட்ட
கட்டிடமொன்றிற்கு பிரபல யூதனும், நாஸ்திகவாதியுமான ஐன்ஸ்டைன் என்பவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சம்மாந்துறை
கல்வி வலயம்
நூற்றிக்கு எழுபது சதவீதம் முஸ்லிம் மாணவர்களையும்,
முஸ்லிம் அதிபர்களையும்,
ஆசிரியர்களையும் கொண்ட ஒரு வலயமாகும். இவ்வலயம்
அமைந்துள்ள சம்மாந்துறையானது முஸ்லிம்களைப்
பெரும்பான்மையாகக் கொண்ட அரபுக்கலாசாலைகள்,
முஸ்லிம் பாடசாலைகள்,
மத்ரசாக்கள், உலமாக்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு
நகரமாகும்.
இவ்வாறான
ஒரு நாஸ்திகனின்
பெயரைந் சூட்டியவர்
அப்போதைய சம்மாந்துறை
வலயக்கல்விப் பணிப்பாளர் தற்போதைய சர்ச்சைக்குரிய மூதூர்
வலயக்கல்விப் பணிப்பாளருமான எம்.கே.எம்.மன்சூர் என்பவராவார்.
இப்பெயரைச் சூட்டியதன் மூலம் தானும் ஒரு
நாஸ்திகவாதி என்பதை கல்வியுலகிற்கு பறைசாற்றியுள்ளார் என கல்வியியலாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.
வழமையாக
பாடசாலைக் கட்டிடங்களுக்கு
பெயர் சூட்டப்படுவதை
நாம் அறிந்து
வைத்துள்ளோம். ஆனால் கிழக்கு மாகாணத்திலேயே வலயக்கல்வி
அலுவலகமொன்றின் கட்டிடத்திற்கு பெயர் சூட்டிய வரலாறு
சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திலேயே இடம்பெற்றிருக்கிறது. அதுவும் ஒரு யூதனும், நாஸ்திகவாதியுமான
ஒருவரின் பெயராகும்.
இவ்வாறு
பெயர் சூட்டப்பட்டதை
சம்மாந்துறை பள்ளிவாசல் நிருவாகமோ, சம்மாந்துறையிலுள்ள மார்க்க அறிஞர்களோ கண்டும், காணாதது
போல் ஏன்
நடந்து கொள்கிறார்கள்
என்பது புரியாத
புதிராக உள்ளதாகவும்
நாஸ்திகரை இஸ்லாம்
அங்கீகரிக்கிறதா என்பதனையும் சம்மாந்துறை மார்க்க அறிஞர்கள்,
கல்வியாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை
கல்வி நிருவாக
சேவை கிழக்கு
மாகாண சங்கச்
செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் கோரிக்கை
விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment