பெருந்தோட்ட சமுதாயத்தினருக்கு வீடொன்றை
நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீட்டை
ரூ. 650,000 இலிருந்து ரூ. 1,000,000 வரை அதிகரிப்பதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
பெருந்தோட்ட சமுதாயத்தினருக்கான வீடுகளை நிர்மாணித்தல் திட்டத்தின் கீழ் வீடொன்றிற்கான நிதி ஒதுக்கீட்டை ரூ. 650,000 இலிருந்து ரூ. 1,000,000 வரை அதிகரிப்பதற்கும், குறித்த தொகையில் 480,000 ரூபாவை நன்கொடையாகவும் மிகுதி தொகையான 520,000 ரூபாவினை மாதாந்த தவணை அடிப்படையில் 15 ஆண்டுகளில் மீள செலுத்தக் கூடிய விதத்தில் அறவிடுவதற்கும், மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மண்சரிவு அபாயத்தின் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறக் கோரப்படும் மக்களுக்கும் வீட்டு நிர்மாணிப்புகளுக்கான செலவினை முழுமையாக வழங்குவதற்குமாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment