திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கை
970 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 970 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள், தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற வேண்டி, தங்கம் மற்றும் ஆபரணங்களைக் கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். அதன்படி நடப்பாண்டில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 970 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
முதலீடு செய்யப்பட்ட தங்கத்துக்கு ஒரு சதவீத வட்டி தங்கமாகவே பெறப்பட்டு, மீண்டும் அது முதலீடு செய்யப்படும்எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு ஆயிரத்து 311 கிலோ தங்கம் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் முதலீடு செய்யப்பட்டதாம்.
2014-ம் ஆண்டு வரை 4 ஆயிரத்து 335 கிலோ தங்கம் 3 வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காணிக்கையாகச் செலுத்தப்பட்டு, வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ள தங்கத்தின் மதிப்பு தற்போது மேலும் அதிகரித்துள்ளதாம்.
0 comments:
Post a Comment