நோய் வாய்ப்பட்ட மகனை

பட்டினி போட்டு கொலை செய்த பெற்றோர்!

இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து

தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம்

கனடாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது மகனை பட்டினி போட்டு கொலை செய்த பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது அங்குள்ள நீதிமன்றம்.

கனடாவின் கால்கரி பகுதியில் குறித்த துயர சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில் குடியிருக்கும் Emil மற்றும் Rodica Radita தம்பதியினருக்கு 8 குழந்தைகள். அதில் ஒருவர் 15 வயதான அலெக்ஸாண்ட்ரு.

சிறுவன் அலெக்ஸாண்ட்ருவுக்கு சிறுவயதைலேயே நீரிழிவு நோய் தாக்கியுள்ளது. ஆனால் போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த பெற்றோர் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி சிறுவனை திட்டமிட்டே புறக்கணித்ததாகவும், வேறெவரும் உதவாத வண்ணம் கண்காணித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் தமது மகனின் நோயை கடவுள் நிவர்த்தி செய்வார் எனவும், மருந்து மாத்திரைகள் எதுவும் சிறுவனை குணப்படுத்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிறுவனனின் பரிதாப நிலை கண்டு மனம் வருந்திய அக்கம்பக்கத்தினர் காவல்துறை உதவியை நாடியுள்ளனர். இதனையடுத்து குறித்த குடியிருப்பை சோதனையிட்ட பொலிசார் மிகவும் பரிதாப நிலையில் இருந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

மட்டுமின்றி சிறுவனை இந்த நிலைக்கு தள்ளிய பெற்றோர் மீதும் திட்டமிட்ட கொலை குற்றத்திற்காக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே சிறுவன் அலெக்ஸாண்ட்ரு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து இந்த வழக்கானது வேகம் கொண்டது.

இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவுக்கு வந்து தீர்ப்பை வழங்கிய நீதிபதி கரேன் ஹார்னர், தண்டனை தீர்ப்பில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். தமது மகன் நோய்வாய்ப்பட்டிருந்தது தெரிந்தும் போதிய மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர். மட்டுமின்றி தங்களது மகனை வேண்டும் என்றே மரணத்திற்கு இவர்கள் காரணமாகியுள்ளது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.


இதனால் தம்பதிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம். மட்டுமின்றி அடுத்த 25 ஆண்டுகளுக்கு இவர்கள் இருவரும் பிணையில் வெளிவர மூடியாத வகையில் கால்கரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top