தேசிய சாரணர் விருது வழங்கும் நிகழ்வு

ஜனாதிபதி தலைமையில்

இலங்கை சாரணர் சங்கம் நான்கு ஆண்டுகளுக்கொரு தடவை நடத்தும் தேசிய சாரணர் விருது வழங்கும் நிகழ்வு இலங்கையின் முதன்மை சாரணர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
கொழும்பு நெலும் பொக்குண கலையரங்கில அரங்கில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் சாரணர் சேவைக்கு அர்ப்பணிப்பு செய்த இருபது பேருக்கு ஜனாதிபதியினால் 'ரஜத சிங்க' விருதுகள் வழங்கப்பட்டது. மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா ஜனாதிபதியிடமிருந்து விருது பெற்றார்.

வளர்ந்தோர்களாக சாரணர் இயக்கத்தில் தன்னார்வத்தடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட ஆசிரியர்களை தேசிய மட்டத்தில் பாராட்டுதல் மற்றும் அவர்களை ஊக்குவித்தல் இந்த விருது விழாவின் முதன்மை நோக்கமாகும். உலக சாரணர் தினமான பெப்ரவரி – 22 ஆம் திகதியோடு இணைந்ததாக நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இலங்கை முழுவதும் பரந்துள்ள 565 சாரண ஆசிரியர்களுக்கும் இதன்போது விருதுகள் வழங்கப்பட்டன.

இந்தியா, கொரியா, மலேசியா, நேபாளம் ஆகிய நாடுகளின் சாரணர் ஆணையாளர்களும் ஜனாதிபதியிடமிருந்து விருதுகளைப் பெற்றுக் கொண்டமை விசேட அம்சமாகும்.

இலங்கை சாரணர் இயக்கத்துக்காக நல்கும் பங்களிப்புக்காக ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வில் அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம், பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார, பிரதம சாரணர் ஆணையாளர் பேராசிரியர் நிமல் டி சில்வா, இலங்கை சாரணர் சங்க தலைவர் ஸ்ரீநாத் குணரத்ன, பிரதி பிரதம ஆணையாளர் சட்டத்தரணி ஜனபிரித் பெர்ணான்டோ உள்ளிட்ட சாரணர் இயக்க பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.













0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top