நீ முஸ்லிமா?
முஹம்மது அலி மகனுக்கு
அமெரிக்காவில் நேர்ந்த கொடுமை
அமெரிக்க விமானநிலையத்தில் வைத்து மறைந்த குத்துச் சண்டை ஜாம்பவான் முஹம்மது அலியின் மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்செய்தியை அவர்களின் நண்பரும், வழக்கறிஞருமான கிறிஸ் மேன்சினி தெரிவித்துள்ளார்.
முஹம்மது அலியின் முன்னாள் மனைவி கலிலா கமாச்சோ, 47 வயதான தனது மகன் முஹம்மது அலி ஜூனியருடன் ஜமைக்காவிலிருந்து விமானம் மூலம் கடந்த 7-ம் திகதி புளோரிடா விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது, விமானநிலையத்தில் வைத்து குடியுரிமைத்துறை அதிகாரிகள் முஹம்மது அலி ஜூனியரை காவலில் எடுத்து இரண்டு மணி நேரம் விசாரித்துள்ளனர்.
நீ முஸ்லிமா? அரவு ஒலி கொண்ட பெயருக்கான காரணம் என்ன? என சரமாரியாக கேள்விகளை கேட்டு விளக்குமாறு அதிகாரிகள் வற்புறுத்தியதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
முஹம்மது அலி மகன்களில் ஒருவரான முஹம்மது அலி ஜூனியர் அமெரிக்காவில் பிறந்தவராவார், பிலடெல்பியா பகுதியில் வசித்துவரும் முஹம்மது அலி ஜூனியரிடம் அமெரிக்க பாஸ்போர்ட் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்த தடையினால் அமெரிக்காவின் பல விமான நிலையங்களில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் முஸ்லிம்களை இதுபோன்ற மன உளைச்சலுக்கு உட்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் பெருகி வருகிறது.
0 comments:
Post a Comment