கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர்
நியமனங்களை செய்வதில் சிக்கல் நிலை
(அஸ்லம்)
கிழக்கு
மாகாணத்தில் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக வலயக்கல்விப்
பணிப்பாளர் நியமனத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக
ஏனைய வலயக்கல்விப்
பணிப்பாளர் நியமனங்களில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்கும்
வகையில் மட்டக்களப்பு
மேற்கு, மட்டக்களப்பு
மத்தி, சம்மாந்;துறை கல்வி
வலயங்களுக்கான வலயக்கல்விப் பணிப்பாளர் விண்ணப்பங்கள் மீளவும்
கோரப்பட வேண்டுமென
கிழக்கு மாகாண
கல்வித்துறை தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன.
மேற்படி
கோரிக்கையை தொழிற்சங்கங்கள் கிழக்கு மாகாண ஆளுனருக்கு
அவசர கோரிக்கையாக
முன்வைத்துள்ளன.
இலங்கை
கல்வி நிருவாக
சேவையின் சேவைப்பிரமாண
விதிகளுக்கு முரணான வகையில் கிழக்கு மாகாண
பொதுச்சேவை ஆணைக்குழு விண்ணப்பங்களைக் கோருவதும், முறையற்ற
புள்ளித்திட்டத்தின் அடிப்படையில் நேர்முகப்பரீட்சை
நடாத்துவதும் வாடிக்கையானதொரு விடயமாக உள்ளது.
இ.க.நி சேவை இரண்டாம்
வகுப்பு உத்தியோகத்தர்களுள்
மூன்றாம் வகுப்பு
உத்தியோகத்தர்களை நேர்முகப்பரீட்சைக்கு அழைத்து
நேர்முகப்பரீட்சை நடாத்துவதும், பொது ஆளணி உத்தியோகத்தர்கள்
இருக்கையில் விசேட ஆளணியினருக்கு நியமனம் வழங்குவதும்
தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
கிழக்கு
மாகாணத்தில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனத்தில்
இடம்பெற்ற முறைகேடு
காரணமாக தற்போது
மட்டக்களப்பு மேற்கு, மட்டக்களப்பு மத்தி ஆகிய
கல்வி வலயங்களுக்கு
நேர்முகப்பீட்சை நடாத்தியும் நியமனம் வழங்க முடியாத
சூழ்நிலை உருவாகியுள்ளது.
சம்மாந்துறை
கல்வி வலயத்தில்
விசேட ஆளணி
உத்தியோகத்தர் வலயக்கல்விப் பணிப்பாளராக இருக்க முடியுமாயின்
மட்டக்களப்பு மேற்கு, மட்டக்களப்பு மத்திய கல்வி
வலயங்களுக்கு விசேட ஆளணி உத்தியோகத்தர்கள் ஏன் இருக்க முடியாது என
கேள்வி எழுப்புகின்றனர்.
இதற்கு பதிலளிக்க
முடியாத நிலை
தற்போது ஏற்பட்டுள்ளது.
இவை
எல்லாவற்றிற்கும் தீர்வாக சம்மாந்துறை, மட்டக்களப்பு மேற்கு,
மட்டக்களப்பு மத்தி ஆகிய வலயங்களுக்கு இ.க.நி.சேவை இரண்டாம்
வகுப்புடையோர் மட்டும் விண்ணப்பிக்கும் வகையில் விண்ணப்பம்
மீளவும் கோரப்பட
வேண்டும்.
கிழக்கு
மாகாணத்திலுள்ள 12 தமிழ்மொழி மூல
கல்வி வலயங்களில்
முறையான வகையில்
தெரிவுகள் இடம்பெற்றுள்ள
நிலையில் சம்மாந்துறைக்கு
மட்டும் விசேட
சலுகை வழங்கப்பட
வேண்டியதன் அவசியம் என்னவெனவும் கல்வித்துறை தொழிற்சங்கங்கள்
கேள்வி எழுப்பியுள்ளன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.