ஜனக்கூட்டத்தினிடையே
லொறி புகுந்து விபரீதம்
அமெரிக்காவின்
நியூ ஆர்லியன்ஸ்
நகரில் திருவிழா
கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே கனரக லொறி புகுந்து
விபத்து ஏற்பட்டதில்
28 பேர் படுகாயமடைந்துள்ள
சம்பவம் கடும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின்
நியூ ஆர்லியன்ஸ்
நகரில் மிக
பிரபலமான Mardi Gras Endymion கொண்டாட்டம் நடைபெற்று
வந்தது. குழந்தைகளுடன்
குடும்பங்கள் பலவும் குறித்த திருவிழா கொண்டாட்டங்களை
காண குவிந்திருந்தனர்.
இந்நிலையில்
திடீரென்று அந்த பகுதியில் கனரக லொறி
ஒன்று வேகமாக
புகுந்ததில் 28 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த
விபத்தில் படுகாயமடைந்தவர்களில்
5 பேரது உடல்நிலை
கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காயமடைந்தவர்களில்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரும் அடங்குவர்
என கூறப்படுகிறது.
லொறி வந்த
வேகத்தில் எதிர்பட்டவர்களை
இடித்து தெறிக்க
விட்டதாக பார்வையாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
விபத்து
குறித்து தகவல்
அறிந்து விரைந்து
வந்த மீட்பு
படையினர் மற்றும்
பொலிசார், காயமடைந்தவர்களை
மீட்டு உடனடியாக
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில்
குறித்த சம்பவம்
மதுபோதையில் நடந்துள்ளதாகவும், தீவிரவாத
செயலுக்குரிய எவ்வித முகாந்திரமும் இதுவரை தென்படவில்லை
என பொலிஸ்
உயர் அதிகாரி
மைக்கேல் ஹாரிஸ்ஸன்
தெரிவித்துள்ளார்.
நியூ
ஆர்லியன்ஸ் பொலிசாருடன் குறித்த வழக்கினை எப்.பி.ஐ அதிகாரிகளும் இணைந்து
விசாரிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய
லொறி ஓட்டுநர்
அதிக மதுபோதையில்
இருந்ததால் தாம் என்ன செய்கிறோம் என்பதை
அவர் அறிந்திருக்கவில்லை
என விபத்தை
நேரில் பார்த்த
பலரும் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.