வறுமையின் கோரப்பிடியில் சிக்கி
ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விட்ட
ரஸ்ய முன்னாள் வீராங்கனை
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி கரையேற முடியாமல் தவித்த ரஸ்ய முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை, ஒலிம்பிக்கில் தான் வாங்கிய பதக்கங்க்களை ஏலத்தில் விற்றிருக்கிறார்.
1972-ம் ஆண்டு நடைபெற்ற முனிச் ஒலிம்பிக் போட்டிகளில் ’ஜிம்னாஸ்டிக் டார்லிங்’ என புகழப்பட்டவர் ஒல்கா கோர்பட். ரஸ்யாவின் முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான இவருக்கு தற்போது வயது 61.
இந்நிலையில், வறுமையின் கோரப்பிடி காரணமாக ஒலிம்பிக்கில் தான் வாங்கிய இரண்டு தங்கப்பதக்கம், ஒரு வெள்ளிப்பதக்கம் மற்றும் கோப்பைகள் உட்பட மொத்தம் முப்பத்திரண்டு பொருட்களை ஒல்கா ஏலத்தில் விட்டுள்ளார்.
இதன் மூலம் இவருக்கு 3,33,500 அமெரிக்க டாலர்கள் கிடைத்துள்ளன. அதிகபட்சமாக ஒலிம்பிக்கில் இவர் வாங்கிய தங்கப்பதக்கம் 66,000 அமெரிக்க டாலருக்கு விலை போயுள்ளது.
1991-ம் ஆண்டில் அமெரிக்காவுக்குப் குடிபெயர்ந்த ஒல்கா தற்போது அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் வசித்து வருகிறார்.
ஒல்கா வாங்கிய ஒலிம்பிக் மெடல்கள் அவரை பசியிலிருந்து காப்பாற்றியதாக, அமெரிக்க பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment