நடிகர்
கமல்ஹாசன் எழுதியாதாக வெளியான கவிதை!
‘சிங்கமில்லாக் காடு’ ‘மாற்றான் தோட்டத்து மல்லிகை’
செங்கோல் வாங்கிய
சிங்கமொன்று
ஜெயமாய்க் காட்டை
ஆண்டது
மறுமுறை ஆட்சியைப்
பிடித்தபின்னும்
மர்மமாய் அதுவும்
மாண்டது
உடனிருந்த கள்ள
நரியொன்றின்
உள்ளத்தில் ஆசையோ
மூண்டது
புசிக்கலாம் இந்தக்
காட்டையென்றே
புதிய வேடம் பூண்டது!
வேரில் ஊற்றிய வெந்நீராய்
வெடுக்கெனப் பதவியைப்
பறித்ததனால்
திடுக்கிட்டுத் திருந்திய
ஓநாயோ
தியான நாடகம் போட்டது!
ஊரில் உள்ள உத்தமர்கள்
ஒன்றாய்ச் சேர்ந்திட
வேண்டுமென
தேரில் தன்னை ஏற்றிடவே
திருடர்கள் துணையைக்
கேட்டது!
அத்தை மறைந்த நல்வாய்ப்பில்
தத்தை ஒன்றும் கிளையமர்ந்து
விழியில் தீபம்
ஏற்றியே
வித்தைக் காட்டத்
தொடங்கியது!
நத்தை வேகத்தில் நகர்ந்தவொரு
சொத்தை வாங்கிய வழக்கினது
திருத்தி எழுதிய
தீர்ப்பாலே
நரியின் கனவோ
முடங்கியது!
காட்டைக் காக்கத்
தேர்ந்தெடுத்த
அடிமை விலங்குகள் ஓரிடத்தில்
அவரவர் வேலையை மறந்துவிட்டு
அடைபட்டுக் கிடந்து
வியர்த்தனவே!
காசை வாங்கி வாக்களித்த
கானகத்து உயிர்களெல்லாம்
ஆசை வெறுத்த மனத்துடனே
அடுத்தடுத்த நாடகம்
பார்த்தனவே!
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.