பகிடிவதை தொடர்பில் இணையத்தில் முறையிடலாம்
“கணினித் தொகுப்பு முறைப்பாடுப் பொறிமுறை”
பகிடிவதை
என்ற பெயரில்
நிகழ்த்தப்படும் கொடூரங்களை முறையிடுவதற்கு,
“கணினித் தொகுப்பு
முறைப்பாடுப் பொறிமுறை” என்ற ஒன்றை, பல்கலைக்கழக
மானியங்கள் ஆணைக்குழு நிறுவியுள்ளது.
முறைப்பாடுகள்
கிடைக்கப் பெற்றவுடன்
அது தொடர்பில்
விசாரிக்கப்படும் அதே வேளை முறையிட்ட பின்னர்
அதனை மீளப்
பெற முடியாது.
பொய் முறைப்பாடுகள்
செய்தால் ஒழுக்காற்று
நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
என, பல்கலைக்கழக
மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ugc.ac.lk/rag/ எனும் இணையத்தளத்தினுடாக
பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் குறித்த முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கான
வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சகலவிதமான பகடிவதைகள்
குறித்தும் மேற்குறிப்பிட்ட இணையத்தளத்தில் முறையிட
முடியும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு
வழிகாட்டல், பாதுகாப்பு வழங்குதல் மற்றும் கல்வியை
தொடர ஆதரவும்
வழங்கப்படவுள்ளது. மேலும், 24 மணித்தியாலங்களும்
செயற்படக் கூடிய
0112-123700, 0112-123456 என்ற தொலைபேசி இலக்கங்களையும்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment