கிழக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக
அரச சேவை ஆணைக்குழு வழங்கியுள்ள அறிவுறுத்தலுக்கமைய
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் பதவியில் மாற்றம் வருமா?
(அஸ்லம்)
கிழக்கு
மாகாணத்தில் அண்மைக்காலமாக நிலவி வரும் வலயக்கல்விப்
பணிப்பாளர் நியமனம் தொடர்பான சிக்கல்களுக்கு அரச
சேவை ஆணைக்குழு
கிழக்கு மாகாணப்
பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ள
அறிவுறுத்தலில் இலங்கை கல்வி நிருவாக சேவை
இரண்டாம் வகுப்பு
உத்தியோகத்தர்கள் இருக்கையில் மூன்றாம் வகுப்பு உத்தியோகத்தர்களுக்கு
வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனங்கள் வழங்கப்படக்கூடாது என அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு
மேற்கு வலயம்,
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம் ஆகியவற்றிற்கு
நடாத்தப்பட்ட வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனம் தொடர்பான
நேர்முகப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வலயக்கல்விப் பணிப்பாளர்களை
நியமிப்பதில் சிக்கல் நிலை தோன்றியது. இதனையடுத்து
இச்சிக்கலைத் தீர்த்துக் கொள்வதற்காக இலங்கை கல்வி
பிரமாண சேவைக்குறிப்பை
வெளியிட்ட அதிகாரி
என்ற வகையில்
அரச சேவை
ஆணைக்குழுவுடன் கிழக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு
தெளிவுபடுத்தலைக் கோரியிருந்தது. இதனடிப்படையிலேயே
மேற்கண்ட தெளிவுபடுத்தலை
அரச சேவை
ஆணைக்குழு வழங்கியுள்ளதுடன்
பிரமாணக்குறிப்பின் அடிப்படையில் இலங்கை
கல்வி நிருவாக
சேவை பொது
ஆளணி உத்தியோகத்தர்களை
வலயக்கல்விப் பணிப்பாளர்களாக நியமிக்க வேண்டும் எனத்
தெளிவுபடுத்தியுள்ளது.
இத்தெளிவுபடுத்தலுக்கமைய
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு நடாத்தப்பட்ட
நேர்முகப்பரீட்சையின் அடிப்படையில் இலங்கை
கல்வி நிருவாக
சேவை இரண்டாம்
வகுப்பு உத்தியோகத்தர்கள்
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்கு நடாத்தப்பட்ட
நேர்முகப்பரீட்சையில் இரண்டாம் வகுப்பு
உத்தியோகத்தரும் விண்ணப்பிக்காத நிலையில் நேர்முகப்பரீட்சையில் கலந்துகொண்ட மூன்றாம் வகுப்பு உத்தியோகத்தர்களில்
பொது ஆளணி
உத்தியோகத்தர் ஒருவரும் நியமிக்கப்படவுள்ளதாக
கிழக்கு மாகாண
அரச சேவை
ஆணைக்குழு அதிகாரி
ஒருவர் தெரிவித்தார்.
அரச
சேவை ஆணைக்குழுவின்
தெளிவுபடுத்தலைப் பின்பற்றி சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர்
நியமனத்திலும் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனத்திற்காக நடாத்தப்பட்ட
நேர்முகப்பரீட்சையில் இலங்கை கல்வி
நிருவாக சேவை
இரண்டாம் வகுப்பைச்
சேர்ந்த 03 சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றியிருக்கையில் இலங்கை கல்வி நிருவாக
சேவை மூன்றாம்
வகுப்பு விசேட
ஆளணி (விவசாயம்)
உத்தியோகத்தர் ஒருவர் கடமை புரியும் (Coverup duty) அடிப்படையில்
நியமனம் செய்யப்பட்டார்.
இவரது
நியமனக்கடிதத்தில் பொருத்தமான உத்தியோகத்தர்
ஒருவர் (Suitable officer)) நியமிக்கப்படும்வரை என குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்டிருந்தது. தற்போது அரச சேவை ஆணைக்குழுவானது
பொருத்தமான உத்தியோகத்தர் யாரென அறிவித்துள்ளதையடுத்து சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனத்திலும்
மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டுமென கிழக்கு
மாகாணத்தில் கடமையாற்றும் இலங்கை கல்வி நிருவாக
சேவையின் சிரேஸ்ட
அதிகாரிகள் கிழக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவை
வலியுறுத்தி கேட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment